உடல் சக்தி மேம்பட பலவிதமான யோகாசனங்கள் உள்ளன. யோகா செய்யும் போது உடலுக்குள் இருக்ககூடிய தசைகள், நரம்புகள், இரத்த ஓட்டம் மற்றும் அனைத்து உறுப்புகளின் சக்தி மேம்படும். உடல் சக்தி மேம்பட்டால் தான் அன்றாட வேலையை தொடர்ந்து செய்வதில் எந்தவித சிக்கலும் இருக்காது. இலட்சியத்தை நோக்கி பயணிக்க முடியும்.
யோகா செய்வதால் வயதான காலத்திலும் ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே உடல் சக்தி மேம்பட வேண்டுமென்றால் அனைத்து உறுப்புகளுக்குமே பலத்தை கொடுக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும். அந்த நிலையில் பார்க்கும் போது யோகாசனத்தில் சிறப்பான பயிற்சி ஒன்று இருக்கிறது.
அதற்கு தனுராசனம் என்று பெயர். தனுர் என்று வில் என்று பொருள். அந்த வில் எப்போதுமே நரம்புகளால் பிணைக்கப்பட்டு முழுமையான மூங்கிலை போல மிக இறுக்கமாக இருக்கும். வில் மூங்கிலால் தயாரிக்கப்படுகிறது. அது இறுக்கமாக இருந்தால் மட்டுமே அம்பை சரியாக இலக்கை நோக்கி விட முடியும்.
அந்த நிலையில் பார்க்கும் போது வில் ஆசனம் என்பது உடல் சக்தி மேம்படுவதற்கான எலும்பு அடுக்குகள், நரம்புகள் முறுக்கப்பட்டு எப்போதும் சக்தியாக இருக்க உதவும். பொதுவாகவே நாம் முன்னோக்கி குனிவது
கிடையாது பின்புறமாக வளைவதும் கிடையாது. அதனால் இந்த ஆசனம் செய்யும் போது முதுகு எலும்புகள் இறுக்கமாகிறது. இதனால் முதுகில் இருக்கும் நரம்புகளும் பலனடைகின்றன.
எனவே உடல் சக்தி மேம்பட வேண்டுமானால் தனுராசனம் என்று சொல்லக்கூடிய வில் ஆசனத்தை செய்ய வேண்டும். இதை படிப்படியாகப் பயிற்சி செய்யும் போது அனைத்து வயதினருக்கும் உடல் சக்தி மேம்படும். சிறப்பாகப் பணியாற்றவும் முடியும். ஏனென்றால் முதுகில் நெகிழ்வுதன்மை ஏற்படும். இதனால் தனுராசனம் எப்படி செய்வது என பார்க்கலாம்.
இது உடல் சக்தியை மட்டுமல்ல மன சக்தியையும் மேம்படுத்தும். அதே போல உடலுக்குள் இருக்கும் ஆதார சக்கரங்களுக்கும் ஆற்றலை அளிக்கும். குப்புறப்படுத்து வயிறு காலியாக இருக்கும் போது காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த ஆசனத்தை செய்யலாம்.
இரண்டு கைகளையும் பின்நோக்கி கொண்டு சென்று வலது மற்றும் இடது கால்களை படிப்படியாக முன்னே கொண்டு வந்து பெண்கள் கொலுசு அணியக்கூடிய மணிக்கட்டு பகுதியில் பிடிக்க வேண்டும். இப்போது லேசாக மூச்சை உள்வாங்கிக் கொண்டே நெஞ்சை மற்றும் தொடை பகுதியை மேலே உயர்த்த வேண்டும். இதை செய்யும் போது முழங்கை வளையக் கூடாது.
இதனால் முதுகு எலும்புகள் உள் மூலமாக திறக்கப்பட்டு நரம்புகளிலும், தசைகளிலும் நெகிழ்வுதன்மையை ஏற்படுத்தி ஆற்றலைக் கொடுக்கும். மூச்சை விட்டு இயல்பு நிலைக்குத் திரும்புங்கள். கை நேராக இருந்தால் உடலை தூக்கும் போது சற்று எளிதாக இருக்கும். கால் பாதங்களுக்கு இடையே இடைவெளி தேவை. உடல் சக்தி மேம்படுவதற்கு முதுகு தண்டில் இருக்ககூடிய எலும்பு அடுக்குகள், நரம்புகளுக்கு நல்ல தூண்டுதல் ஏற்படும். மீண்டும் ஓய்வு நிலைக்கு திரும்புங்கள்.
உதாரணத்திற்கு இந்த ஆசனத்திற்கு முன்பாக எலும்பு அடுக்குகளின் நீளம் 15 அங்குலம் இருக்கிறது என்றால் ஆசனம் செய்யும் போது எலும்பு அடுக்குகளின் நீளம் 13 அங்குலம் இருக்கும். இரண்டு அங்குலத்திற்கு எலும்பு அடுக்குகள் உள்ளே திருப்பட்டு இருக்கும். வில் போன்று உங்கள் உடல் மாறுவதால் இது வில் ஆசனம் என்று அழைக்கப்படுகிறது.
நன்கு கவனியுங்கள் லேசான மூச்சுக் காற்றை உள்வாங்கிக் கொண்டு மேல் நோக்கி செல்ல வேண்டும். இப்படி செய்வதால் எலும்பு அடுக்குகள், சுமார் 70 ஆயிரம் நரம்புகள் தூண்டப்படும். வயிற்றின் அடி பகுதி மட்டுமே தரையில் ஒட்டியிருக்க வேண்டும். தலை, கால் அனைத்தும் மேல் நோக்கி இருக்க வேண்டும். இதனால் முதுகு தண்டை சார்ந்து இருக்க கூடிய அனைத்தின் சக்தியும் மேம்படும். முதுகில் இருக்கும் சக்கரங்களும் நன்கு தூண்டப்படுகிறது.
நமது வாழ்க்கையில் எளிதில் நோய்கள் ஏற்படாது. வாழ்க்கையில் தொடர்ந்து பயனப்படுவதற்கான ஆற்றல் தேவைப்படும் என்பதால் உடல் சக்தி மேம்பட இந்த தனுராசனத்தை படிப்படியாக முயற்சி செய்யுங்கள். வயிறு நிறைய உணவு சாப்பிட்டு இந்த பயிற்சியை செய்யக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும். வேகவேகமாக இந்த பயிற்சி செய்வதை தவிர்த்துவிடுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation