
ப்ரோக்கோலி என்பது சாதாரண உணவு பொருள் மட்டுமல்ல. இது ஊட்டச்சத்துகளின் களஞ்சியம் போன்றதாகும். உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவது முதல் எலும்புகளை வலுவாக வைத்திருப்பது வரை இதற்குள் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவற்றை இந்தக் குறிப்பில் காணலாம்.
வைட்டமின் சி:
100 கிராம் ப்ரோக்கோலியில் சுமார் 89 மி.கி வைட்டமின் சி உள்ளது. இது தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவில் கிட்டத்தட்ட 100% ஆகும். இதன் அன்டிஆக்ஸிடன்ட் நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது, உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது. மேலும், இரும்புச் சத்தை உறிந்து கொள்ளும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க: அதிகமான புரதம், முழு ஆரோக்கியம்; இந்த வகையில் முட்டை சாப்பிட்டால் இரட்டை பலன்!
ப்ரோக்கோலி, 100 கிராமுக்கு சுமார் 623 ஐ.யூ வைட்டமின் ஏ-வை வழங்குகிறது. இது உங்கள் கண்பார்வையை கூர்மையாகவும், சருமத்தை மென்மையாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை உறுதியாகவும் வைத்திருக்க உதவுகிறது. அதன்படி, இந்த சத்துகளில் ப்ரோக்கோலி முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சி முதல் சருமப் பொலிவு வரை... தேங்காயின் நன்மைகள்!
ப்ரோக்கோலியில் வைட்டமின் கே அதிகமாக உள்ளது. 100 கிராமுக்கு சுமார் 101.6 மைக்ரோகிராம் வைட்டமின் கே சத்து கிடைக்கிறது. இது உங்கள் தினசரி தேவையை விட அதிகமாகும். இது இரத்தம் உறைதலுக்கு சிறந்தது மற்றும் வலுவான, ஆரோக்கியமான எலும்புகளுக்கு மிக முக்கியமானதாகும்.

100 கிராம் ப்ரோக்கோலியில் 63 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது. இது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே, ஃபோலேட் சத்தை அதிகரிக்க வேண்டும் என்று கருதுபவர்கள் தவறாமல் ப்ரோக்கோலியை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ப்ரோக்கோலியில் 100 கிராமுக்கு சுமார் 0.2 மி.கி வைட்டமின் B6 உள்ளது. இது உங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், மனநிலையை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. மேலும், உணவை ஆற்றலாக மாற்றுவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறைந்த அளவு என்றாலும், தினசரி தேவைக்கு பங்களிக்கும் ஒரு நல்ல சத்தாகும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]