herzindagi
image

கூந்தல் வளர்ச்சி முதல் சருமப் பொலிவு வரை... தேங்காயின் நன்மைகள்!

தேங்காயின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். குறிப்பாக, கூந்தல், சருமம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தேங்காய் உதவி ஆக இருக்கிறது.
Editorial
Updated:- 2025-10-25, 10:33 IST

கூந்தல், சருமம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை தேங்காய் தருகிறது. கூந்தலுக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய், முடியை வலிமை ஆக்குகிறது. மேலும், பொடுகு தொல்லையை நீக்கி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தேங்காய் தண்ணீர் மற்றும் தேங்காய் பால் ஆகியவை உடலுக்கு ஊட்டமளித்து, சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து இயற்கையான பொலிவை கொடுக்கின்றன.

மேலும் படிக்க: கை நடுக்கம் அதிகமாக இருக்கிறதா? வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்; அலட்சியப்படுத்த வேண்டாம்

 

தேங்காய், பல நூற்றாண்டுகளாக நம் பாரம்பரியத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. ஊட்டமளிக்கும் எண்ணெய், புத்துணர்ச்சியூட்டும் தேங்காய் தண்ணீர் என எந்த வடிவத்தில் இருந்தாலும், நமக்கு அதிகப்படியான ஆற்றலை அளிக்கும் தன்மை இதில் காணப்படுகிறது.

 

தலைமுடி ஆரோக்கியத்தில் தேங்காயின் பங்கு:

 

கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இயற்கையாகவே தலைமுடிக்கு பளபளப்பான தோற்றத்தை அளிக்கிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் அன்டிஆக்சிடென்ட்ஸ் ஆகியவை உச்சந்தலையில் ஆழமாக ஊடுருவி முடியின் வேர்களை வலுப்படுத்துகிறது. மேலும் பொடுகு வராமல் தடுக்கிறது. உஷ்ணத்தால் முடிக்கு ஏற்படும் பாதிப்பையும் தேங்காய் எண்ணெய் கட்டுப்படுத்துகிறது.

Coconut uses

 

ஆற்றலை அதிகரிக்கும் உணவு:

 

ஸ்மூத்தி போன்ற பானங்களில் தேங்காயை சேர்க்கும் போது, உடலுக்கு தேவையான நீர்ச்சத்து, புத்துணர்ச்சி மற்றும் ஆற்றல் கிடைக்கிறது. இதில் இயற்கையாகவே எலக்ட்ரோலைட்டுகள் அடங்கியுள்ளன. இது உடற்பயிற்சிக்கு பிந்தைய களைப்பிலிருந்து மீண்டு வர உதவுகிறது. அதே நேரத்தில், தேங்காய் பால் மற்றும் துருவிய தேங்காய் ஆகியவை ஆரோக்கியமான கொழுப்புகளை அளிக்கிறது. இதன் மூலம் நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும் உணர்வு கிடைக்கும்.

மேலும் படிக்க: ஊறவைத்த பூசணி விதைகளில் இவ்வளவு நன்மைகளா? நோட் பண்ணுங்க மக்களே

 

சரும பராமரிப்பில் தேங்காயின் பங்கு:

 

தேங்காய் எண்ணெய், ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் வறண்ட சருமம், வெடிப்புற்ற உதடுகள் மற்றும் முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இதன் மூலம் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

Coconut benefits

 

நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள்:

 

மிதமான அளவில் தேங்காய் எடுத்துக்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும், இது வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. சமையல், சரும பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம் என பல வழிகளில் தேங்காயை எளிமையாக பயன்படுத்தலாம். எனவே, தேங்காயை பயன்படுத்துவதற்கு முன்பாக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]