நம் சமையலறையில் இருக்கும் சிறிய விஷயங்கள் கூட சில சமயங்களில் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும். இதற்கு சிறந்த உதாரணம் பூசணி விதைகள். இவை சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், இந்த சிறிய விதைகள் நாம் நினைப்பதை விட அதிக பலன்களை கொண்டுள்ளன.
மேலும் படிக்க: ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு சாப்பிட வேண்டும்? அதிக உப்பு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
தினமும், குறைந்தது ஐந்து பூசணி விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டு வந்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து விளக்கமாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பூசணி விதைகளில் சின்க் சத்து நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதாக அறியப்படும் ஒரு சத்து ஆகும். இது, வெள்ளை இரத்த அணுக்களை தொற்றுநோய்களை எதிர்த்து போராட திறம்பட உதவுகிறது. தினமும் ஒரு சில ஊறவைத்த பூசணி விதைகளை சாப்பிடுவது, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். எனினும், உங்கள் அன்றாட உணவுகளும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பூசணி விதைகளில் மெக்னீசியம் உள்ளது. இது இதய துடிப்பை சீராக வைத்திருக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. இவை அனைத்தும் ஒரே இரவில் நடக்கும் அற்புதம் அல்ல. ஆனால், இது காலப்போக்கில் இருதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் ஒரு நிலையான செயல்முறையாகும்.
பூசணி விதைகளில் இருந்து கிடைக்கும் மெக்னீசியம், இன்சுலின் கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தொடர்ந்து சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். இது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக இல்லை என்றாலும், ஆரோக்கியமான பழக்க வழக்கங்களுடன் சேர்த்து, இது இரத்த சர்க்கரை ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக செயல்படுகிறது.
மேலும் படிக்க: சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை இயற்கையாக மேம்படுத்தும் 7 பழங்கள்; மிஸ் பண்ணாதீங்க மக்களே
எலும்புகள் வலுவாக இருக்க மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அவசியம். ஊறவைத்த பூசணி விதைகள் இந்த இரண்டையும் வழங்குகின்றன. இதன் ஐந்து விதைகள் ஒரே இரவில் எலும்புகளை வலிமையாக்காது. ஆனால், பல மாதங்கள் தொடர்ந்து சாப்பிடுவது எலும்பு தேய்மானத்திற்கு எதிரான பாதுகாப்பு கவசமாக இருக்கும்.
ஊறவைத்த பூசணி விதைகள் மென்மையாவதால், செரிமானத்திற்கு எளிதாக இருக்கும். மேலும், அவை சிறிது நார்ச்சத்துகளையும் வழங்குகின்றன. இந்த நார்ச்சத்துகள் சீரான செரிமானத்திற்கும், குடலின் இயற்கையான இயக்கத்தை பராமரிக்கவும் உதவுகின்றன. இது ஒரு சிறிய சேர்க்கையாக இருந்தாலும், காலப்போக்கில், இத்தகைய சிறிய முயற்சிகள் கூட செரிமான மண்டலத்தை லேசாகவும், சீராகவும் வைத்திருக்கும்.
பூசணி விதைகள் வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களின் ஆற்றல் மையம் போன்று செயல்படும். இந்த கலவைகள், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகின்றன. இவை கண்கள் மற்றும் சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது.
அந்த வகையில், பூசணி விதைகளை தொடர்ச்சியாக சாப்பிடும் போது இந்த பயன்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]