சிறுநீரகங்கள் நமது உடலில் உள்ள நச்சு பொருட்களை அகற்றி, இரத்த அழுத்தத்தையும், எலக்ட்ரோலைட் அளவுகளையும் சரியாக பராமரிக்க உதவுகின்றன. ஒரு ஆரோக்கியமான சிறுநீரக மண்டலம், உடலில் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் சேர்வதை தடுத்து, நமது ஆற்றல், சரும ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
மேலும் படிக்க: பெண்களுக்கு ஏற்படும் இரும்புச்சத்து குறைப்படுகளை போக்க தினசரி செய்ய வேண்டியவை
மேலும், சிறுநீரக நோய்கள் வருவதற்கான அபாயத்தையும் குறைக்கிறது. சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை இயற்கையாக மேம்படுத்த உதவும் ஏழு பழங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
தர்பூசணியில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் நச்சுகளை வெளியேற்றுகிறது. தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் மற்றும் பொட்டாசியம் சிறுநீரகங்கள் சீராக செயல்பட துணைபுரிகிறது.
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டி, சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் இருந்து அனைத்து வகையான நச்சுகளும் வெளியேற்றப்படுகின்றன.
அன்னாசிப்பழத்தில் உள்ள புரோமெலைன் என்ற கலவை, சிறுநீரகங்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, அவற்றின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
ஆப்பிள்கள் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்தவை. இவை சிறுநீரகங்களின் செயல்பாட்டை சீராக்குவதுடன், சிறுநீரக நோய்கள் வருவதற்கான அபாயத்தையும் குறைக்கின்றன. மேலும், இவை கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுவதால், சிறுநீரக ஆரோக்கியம் மேம்படுகிறது.
மேலும் படிக்க: அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பானங்கள்
ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் உள்ளன. இவை சிறுநீரகங்களின் செயல்பாட்டை பராமரிக்கவும், உடலில் உள்ள திரவங்களை சமநிலைப்படுத்தவும் உதவுகின்றன.
மாதுளை பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சிறுநீரகங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.
திராட்சை பழத்திலும் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சிறுநீரகங்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவி செய்கின்றன.
எனவே, இது போன்ற பழங்களை நமது உணவில் தினசரி எடுத்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால், உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் மற்றும் நச்சுகளை அகற்றலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]