
மழைக்காலம் இதமான சூழலை அளிப்பது உண்மை தான். ஆனால், அதுவே சளி, காய்ச்சல் போன்ற பருவகால நோய்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டு வருகிறது. மழைக்காலத்தில் கதகதப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க சிறந்த வழி என்னவென்றால், உடலுக்கு இதமளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும் பானங்களை அருந்துவது தான். மழைக்காலத்தில் நீங்கள் அருந்த வேண்டிய, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்கள் குறித்து இதில் காண்போம்.
மேலும் படிக்க: குடல் இயக்கத்தை சீராக்கும்; நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்; இந்த மழைக்காலத்தில் நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
இந்தியாவின் பாரம்பரிய பானங்களில் இதுவும் ஒன்று. இது, சூடான பாலில் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை மிளகு மற்றும் தேன் சேர்த்து செய்யப்படும் ஒரு பானமாகும். இது உடலில் ஏற்படும் அழற்சிக்கு எதிரானது. மேலும், வைரஸ் எதிர்ப்பு சக்தி கொண்டது மற்றும் உடலுக்கு இதமளிக்கும்.

துளசியும், இஞ்சியும் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றல் மையங்களாக செயல்படுகின்றன. துளசி இலைகள் மற்றும் இஞ்சியை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, தேவையானால் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம். இது தொண்டை வலி, மூக்கடைப்பு மற்றும் செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
இது மிகவும் எளிமையான ஆனால் பயனுள்ள பானமாகும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதே சமயம், தேன் தொண்டையை இதமாக்குகிறது. காலையில் எழுந்ததும் அல்லது உணவுக்கு இடையில் இதை அருந்துவது சிறந்தது.
இது ஒரு பாரம்பரிய பானமாகும். கிராம்பு, பட்டை, மிளகு, துளசி மற்றும் இஞ்சி ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்த வேண்டும். இது சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு எதிராக போராட உதவுகிறது
மேலும் படிக்க: Uses of cumin water: செரிமானத்தை சீராக்குவதில் இருந்து நச்சுகளை அகற்றுவது வரை; சீரக தண்ணீரின் 6 அற்புத பயன்கள்
இஞ்சி துண்டுகள் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். சுவைக்காக தேன் சேர்க்கலாம். இது பாக்டீரியாக்களுக்கு எதிரானது. மேலும், குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கூடுதலாக, உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கிறது.

ஒரு பூண்டு பல்லை நசுக்கி தேனுடன் கலந்து குடிக்கலாம். இல்லையென்றால், அதை வெந்நீரில் கலந்து அருந்தலாம். இது வைரஸ் எதிர்ப்பு சக்தி கொண்டது மற்றும் சுவாச ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இது செரிமானத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் துணைபுரியும் ஒரு பானமாகும். பட்டை மற்றும் கிராம்பை சுடுநீரில் போட்டு, ஒரு இதமான பானமாக அருந்தலாம்.
கேழ்வரகு மாவு, தண்ணீர் அல்லது பால், வெல்லம், ஏலக்காய், சுக்கு போன்ற மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சத்தான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானமாக இது விளங்குகிறது. இது உடலுக்கு இதமளிப்பதுடன், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்ததாகவும் உள்ளது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]