herzindagi
image

Benefits of tulsi water: தினமும் காலையில் துளசி நீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

Benefits of tulsi water: தினமும் காலையில் துளசி நீர் அருந்துவதால் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை இந்தக் கட்டுரையில் விளக்கமாக பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-11-13, 18:42 IST

Benefits of tulsi water: ஆயுர்வேதத்தில் 'மூலிகைகளின் அரசி' என அழைக்கப்படும் துளசி, அதன் மருத்துவ மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்திற்காக நீண்ட காலமாக போற்றப்பட்டு வருகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் துளசி நீர் அருந்துவது நமது உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அதனை எப்படி தயாரிப்பது எனவும், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து இதில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: Triphala suranam benefits: திரிபலா சூரணம் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?

 

துளசி நீர் தயாரிக்கும் முறை:

 

4 முதல் 5 துளசி இலைகள் அல்லது ஒரு தேக்கரண்டி காய்ந்த துளசி இலைகளை எடுத்துக் கொள்ளவும். இவற்றை இரவு முழுவதும் நீரில் ஊறவைக்கலாம். இல்லை எனில் வெந்நீரில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் போட்டு ஊறவைத்து, பின் வடிகட்டி அருந்தலாம். இதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

 

துளசி இலைகளில் வைட்டமின் சி, சின்க் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பயோஆக்டிவ் சேர்மங்கள் நிறைந்துள்ளன. தினசரி காலையில் துளசி நீர் குடிப்பதால், பருவ கால நோய்த் தொற்றுகளிலிருந்து உடலை பாதுகாத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தலாம்.

Tulsi

 

செரிமானத்தை மேம்படுத்தும்:

 

துளசி, செரிமான மண்டலத்திற்கு தூண்டுகோலாக அமைந்து வயிற்று புண் ஏற்படாமல் தடுக்கும் பண்புகளை கொண்டுள்ளது. இது வீக்கம், எரிச்சல் ஆகியவற்றை குறைத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலையில் துளசி நீர் அருந்துவது, உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் முழுமையாக உறிஞ்சப்பட உதவுகிறது.

மேலும் படிக்க: கை நடுக்கம் அதிகமாக இருக்கிறதா? வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்; அலட்சியப்படுத்த வேண்டாம்

 

இருதய ஆரோக்கியத்திற்கு உகந்தது:

 

துளசி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, எடையை கட்டுப்படுத்தவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகிறது. இதன் பயோஆக்டிவ் சேர்மங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். காலையில் துளசி நீர் அருந்துவது, வளர்சிதை மாற்றத்தை தூண்டி, உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

 

சுவாச மண்டலத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்:

 

துளசியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் (anti-inflammatory) சுவாச மண்டலத்திற்கு பாதுகாப்பை வழங்குகின்றன. துளசி நீர் தெளிவான மற்றும் எளிதான சுவாசத்திற்கு உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து துளசி நீர் அருந்துவது சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளின் தீவிரத்தை குறைக்கும்.

Tulsi uses

 

ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தும்:

 

துளசி, இன்சுலின் உணர்திறனை (insulin sensitivity) மேம்படுத்தும். இது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெறும் வயிற்றில் துளசி நீர் குடிப்பதால் ரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க முடியும்.

 

உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்:

 

துளசியில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன. இவை உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, கல்லீரல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. காலையில் துளசி நீர் அருந்துவது உடலை இயற்கையாகவே சுத்தப்படுத்தும் ஒரு சிறந்த பழக்கமாகும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]