நடைபயிற்சி மூலம் ஒரு மாதத்தில் 5 கிலோ எடையைக் குறைக்க முடியுமா என்ற கேள்வி அனைவரின் எண்ணத்திலிம் இருக்கும், இதற்கு பதில் இதோ. எடை குறைக்க நினைப்பது தனிப்பட்ட முடிவாக இருக்கலாம். ஆனால் ஆரோக்கியமாக இருக்கவும் நோய்களை எதிர்த்துப் போராடவும், தினமும் நடைப்பயிற்சி செய்வது அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வது அவசியம். உங்களுக்கு உடல் பயிற்சி செய்ய முடியாவிட்டால், நடப்பது மட்டும் மோசமானதாக இருக்காது. குளிர்காலம், கோடை அல்லது மழைக்காலம் எதுவாக இருந்தாலும், நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் வெறும் நடைப்பயணத்தால் எடை குறைக்க முடியுமா? இதற்காக பதில் நீங்கள் எடுத்து வைக்கும் அடிகளின் வேகம் மற்றும் வளர்சிதை மாற்றம் அனைத்தையும் மனதில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: அடிக்கடி பாத வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால் இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்
டான்ஸ் டு ஃபிட்னஸ் ஸ்டுடியோவின் நிறுவனரும், உடற்பயிற்சி நிபுணருமான சோனியா பக்ஷி, ஹர்சிந்தகியிடம் இது குறித்துப் பேசினார். நடைபயிற்சி மூலம் எடையைக் குறைக்க முடியும் என்று அவர் கூறினார். சோனியாவின் கூற்றுப்படி நடைபயிற்சி மூலம் எடையைக் குறைக்க நீங்கள் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
தினமும் நடைப்பயிற்சி செய்வதால் எடையைக் குறைக்க முடியுமா என்றால் அது கடினம். வெறும் 30 நிமிட நடைப்பயிற்சி உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும், மேலும் கொஞ்சம் ஆரோக்கியமாக இருக்க உதவும். உணவை ஜீரணிப்பதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது, மேலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். ஆனால் இதன் மூலம் மட்டும் எடை இழப்பு நடக்காது.
உடல் எடையை குறைக்க சாதாரண நடைப்பயணத்திற்கு பதிலாக விறுவிறுப்பான நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உங்கள் உடலுக்கு ஏற்ப நடைப்பயணத்தின் வேகத்தை அதிகரிக்க வேண்டும், மேலும் கை அசைவுகளையும் செய்ய வேண்டும். நீங்கள் 30 முதல் 40 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயணத்தை மேற்கொண்டால் 150 கலோரிகளை அதிகமாக எரிக்கலாம்.
மக்கள் தினமும் குறைந்தது 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும். எனவே நீங்கள் முடிந்தவரை நடப்பது முக்கியம். அதிகமாக நடப்பது உங்கள் உடலை சுறுசுறுப்பாக்குகிறது. 10 ஆயிரம் அடிகள் என்பது சுமார் 7 முதல் 8 கிலோமீட்டர்கள் ஆகும், மேலும் நபரின் சுறுசுறுப்பும் வேகமும் இதில் முக்கியமானது.
ஒரு கிலோ எடை என்பது 7000 கலோரிகள் என்றால் ஒரு நபர் 70 கிலோ எடை இருந்தால், 250 கிமீ நடப்பது 1 கிலோ எடையைக் குறைக்கும். இதனால் தினமும் குறைந்தது 50 கிமீ நடக்க வேண்டும், அப்போதுதான் எடை நேர வரம்பிற்கு ஏற்ப குறையும். எனவே சாதாரண நடைப்பயணத்திற்குப் பதிலாக, விறுவிறுப்பான நடைப்பயணத்தை மேற்கொள்வதும் முக்கியம். நடைப்பயணத்துடன் கண்டிப்பான உணவைப் பின்பற்ற வேண்டும்.
தினமும் வறுத்த உணவைத் தொடர்ந்து சாப்பிட்டு, நடப்பதால் எடையைக் குறைக்க முடியாது. முடிந்தவரை பழங்களிலிருந்து கலோரிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இனிப்புகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும்.
நீங்கள் எழுந்த 2 முதல் 2.5 மணி நேரத்திற்குள் காலை உணவை உட்கொள்ள வேண்டும். இதனுடன் காலை உணவுக்குப் பிறகு நான்கு மணி நேரத்திற்குப் பிறகு மதிய உணவை உட்கொள்ள வேண்டும். அதேபோல் நீங்கள் தூங்குவதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு உணவு ஒரு நாளின் மிக லேசான உணவாக இருக்க வேண்டும், மேலும் இரவு உணவில் கார்போஹைட்ரேட் சேர்க்க வேண்டாம்.
மேலும் படிக்க: சைனஸ் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு, இதோ இயற்கையான வழியில் சிறந்த தீர்வு
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]