herzindagi
execises big  image

15 நாட்களில் உடல் கொழுப்பை குறைத்து ஸ்லிம்மாக மாற்றும் 3 உடற்பயிற்சிகள்

உடல் பருமனால் சிரமப்படுகிறீர்கள் ஆனால் முயற்சி செய்தும் உடல் எடை குறைக்க முடியவில்லை என்றால் இந்த பயிற்சிகளை செய்தலே 15 நாட்களில் மாற்றத்தை உணர்வீர்கள்
Editorial
Updated:- 2024-05-23, 15:21 IST

எடை அதிகரிப்பது எவ்வளவு எளிதாக இருக்கிறதோ அதைக் குறைப்பது மிகவும் கடினம். ஆனால் இதற்காக கவலைப்படத் தேவையில்லை ஏனென்றால் பயனுள்ள 3 பயிற்சிகளை செய்தால் போதும். உடலில் உள்ள கொழுப்பை எரிக்க வீட்டிலேயே இந்த பயிற்சிகளை எளிதாகவும் குறைந்த நேரத்திலும் செய்யலாம். இவை பற்றி ஃபிட்னஸ் நிபுணர் ஜூஹி கபூர் கூறியுள்ளார்.

உடல் பருமனால் தொந்தரவு மற்றும் முழங்கால் வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால் இந்த 3 எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும். இவற்றை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். அவற்றைப் பற்றிய சிறந்த விஷயம் என்னவென்றால் இந்த பயிற்சிகள் உங்கள் முழு உடலுக்கு சேருகிறது. உடலின் ஒரு பகுதியில் உள்ள கொழுப்பு குறைவதில்லை. நீங்கள் சரியான திசையில் பயிற்சி செய்ய ஆரம்பித்தவுடன் முழு உடல் கொழுப்பையும் குறைக்கத் தொடங்குகிறது. இந்தப் பயிற்சிகளை 15 நாட்கள் செய்தால் மட்டுமே மாற்றங்களை உணர முடியும்.

மேலும் படிக்க: பீட்ரூட்டை இப்படி சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும்

பக்கவாட்டு வளைவுகள் உடற்பயிற்சி

 exercise inside

இந்த உடற்பயிற்சி பக்க வளைவுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இது வயிறு, இடுப்பு, கால்கள் மற்றும் தொடைகளில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த ஓட்டமும் மேம்படும்.

உடற்பயிற்சி செய்முறை

  • உங்கள் கால்களைத் திறந்து நிற்கவும்.
  • பின் உங்கள் கைகளை மேலே உயர்த்த வேண்டும்.
  • பின்னர் உங்கள் வலது கையை மடக்கி இடுப்பில் வைக்கவும்.
  • இடது கை மற்றும் உடலை வலது பக்கம் சாய்க்கவும்.
  • மறுபக்கத்திலிருந்தும் இதைச் செய்யுங்கள்.
  • உடற்பயிற்சியை இருபுறமும் குறைந்தது 20 முறை செய்யவும்.

தலை முதல் கால் வரை தொடுதல் உடற்பயிற்சி

Toe Touch Exercises

இந்த பயிற்சியில் கால்களை கைகளால் தொட வேண்டும். எனவே இது முழு உடல் பயிற்சியை அளிக்கிறது.

உடற்பயிற்சி செய்முறை 

  • முதலில் நேராக நிற்கவும் வேண்டும். அதன்பின் கால்களை இடுப்பு தூரம் தவிர்த்து நிற்க வேண்டும்.
  • கைகள் இரண்டையும் தலைக்கு பின்னால் வைக்க வேண்டும்.
  • இப்போது வலது காலை உயர்த்தி இடது கையால் கால்விரல்களைத் தொட வேண்டும்.
  • இதைச் செய்யும்போது மார்பை மேல்நோக்கி வைக்கவும்.
  • பிறகு மீண்டும் முதல் நிலைக்கு வரவும்.
  • இப்போது இடது காலை மேலே தூக்கி வலது கையால் கால்விரல்களைத் தொட்டு மீண்டும் செய்யவும்.
  • உடற்பயிற்சியை இருபுறமும் 30 முறை செய்ய வேண்டும்.

ஜாக்ஸ் உடற்பயிற்சி

cheer jacks exercise inside

இது ஒரு கார்டியோ உடற்பயிற்சியாகும். இது முழு உடல் எடையையும் குறைக்க உதவுகிறது. இதயம் மற்றும் தசைகளுக்கு இது சிறந்த பயிற்சியாகும். இந்தப் பயிற்சியை தினமும் செய்வதால் மன உறுதியும், மன அழுத்தமும் குறைந்து, நுரையீரல் வலுவடையும்.

உடற்பயிற்சி செய்முறை

  • கால்களில் சிறிது இடைவெளி விட்டு நேராக நிற்கவும்.
  • இரண்டு கைகளையும் மேல்நோக்கி நகர்த்தவும்.
  • இப்போது வலது காலை மேலே தூக்கி இரண்டு கைகளையும் கீழே கொண்டு வரவும்.
  • இப்போது உங்கள் கைகளால் வலது பாதத்தைத் தொட முயற்சிக்கவும்.
  • இடது காலால் உடற்பயிற்சியை மீண்டும் செய்யவும்.
  • உடற்பயிற்சியை இருபுறமும் குறைந்தது 20 முறை செய்யவும்.

மேலும் படிக்க: கோவக்காயில் இருக்கும் இரண்டு முக்கிய மருத்துவ குணங்கள்

பெண்களாகிய நாம் உடல் கொழுப்பைக் குறைக்கும் உடற்பயிற்சியைப் பற்றிச் சிந்திப்பதில்லை, ஏனென்றால் அதிக வேலைகளைச் செய்வது உடற்பயிற்சிக்கு சமம் என்று நினைக்கிறோம். ஆனால், உடல் கொழுப்பை குறைக்க முறையான உடற்பயிற்சி செய்வது அவசியம். இந்த 3 பயிற்சிகளை செய்வதன் மூலம் 15 நாட்களில் உடல் கொழுப்பை குறைக்கலாம்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit- Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]