
Weight loss tips: உடல் எடையை குறைக்கும் பயணம் என்பது ஒரு சாகசத்தை போன்றது. அதில் சில சூழ்நிலைகளில் ஏற்ற, இறக்கங்களை சந்திக்கலாம். எதிர்பார்த்த வேகத்தில் முன்னேற்றம் இல்லையென்றால் உத்வேகத்தை இழப்பது இயல்பு தான். ஆனால், நிலைத்தன்மை தான் இந்த பயணத்தில் மிக முக்கியமானது.
நம்முடைய முயற்சிக்கு கூடுதல் ஊக்கமளிக்கக்கூடிய சில உணவுகளும் பானங்களும் உள்ளன. உதாரணமாக, மூலிகை பானங்களை எடுத்துக் கொள்ளலாம். அவை இயற்கையானவை மட்டுமல்ல, உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. இதனால் கொழுப்பை குறைப்பது எளிதாகிறது.
அந்த வகையில், உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தை எளிமையானதாக மாற்றுவதற்கு, நீங்கள் தினசரி அருந்தக் கூடிய 5 மூலிகை பானங்கள் குறித்து இதில் பார்க்கலாம். இதனை தயாரிப்பது எளிதானதாக இருப்பதால், எல்லோராலும் சுலபமாக செய்ய முடியும்.
உடலில் உள்ள அதிகப்படியான எடையை குறைப்பதற்கு, கிரீன் டீ உங்களுக்கு மிகவும் உதவக்கூடியது. இது, உங்கள் வளர்சிதை மாற்றத்தை வேகமாக தூண்டும் பானமாகும். கிரீன் டீயில் கேடசின்ஸ் (Catechins) எனப்படும் இயற்கையான அன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இவை கொழுப்பை குறைக்க உதவுகின்றன. இதில் உள்ள மிதமான அளவு காஃபின், நீங்கள் சோர்வடையாமல், சீரான ஆற்றலை பெற உதவுகிறது. இதனால், நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்புடன் இருக்க முடியும்.

உணவுக்கு இடையில் ஒரு சூடான கோப்பை கிரீன் டீயில், சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து குடிப்பது நல்லது. இந்த இதமான தேநீர், நாள் முழுவதும் உங்களை ஆற்றலுடன் சீராக வைத்திருக்க உதவும். கிரீன் டீ, உங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுவதோடு, உங்களை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் துணைபுரிகிறது.
உங்கள் அன்றாட பழக்க வழக்கங்களுக்கு புத்துயிர் அளிக்கும் கொத்தமல்லி நீர், செரிமானத்திற்கு உதவும் ஒரு எளிய மற்றும் ஆற்றல் மிகுந்த பானமாகும். கொத்தமல்லி விதைகளை லேசாக நொறுக்கி, கொத்தமல்லி இலைகளுடன் சேர்த்து தண்ணீரில் கலக்கவும். இந்தக் கலவையை இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில், வெறும் வயிற்றில் இதைக் குடிப்பதன் மூலம் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
இது வயிறு உப்புசம், வாய்வு தொல்லை போன்றவற்றை குறைக்கும். அத்துடன், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் இது உதவுகிறது. செரிமானம் சீராக இருந்தால் உடல் எடை குறைப்பு பயணம் இலகுவாக இருக்கும்.
மேலும் படிக்க: வேலை செய்யும் போது சோர்வாக இருக்கிறதா? உடனடி ஆற்றலுக்கு இந்த உணவுகளை சாப்பிடவும்
ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த, புத்துணர்ச்சியூட்டும் தேன் மற்றும் எலுமிச்சை நீருடன் உங்கள் காலை நேரத்தை தொடங்கலாம். இந்த சுவையான பானம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதில் சேர்க்கப்படும் தேன் செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடிக்கும் போது உங்கள் வளர்சிதை மாற்றம் உத்வேகம் பெற்று, நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.

கூடுதல் சுவைக்காக சில புதினா இலைகளை இந்த பானத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். இது சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்திற்கு உறுதுணையாகவும் இருக்கும்.
இது வயிறு உப்புசத்தை கட்டுப்படுத்துவதற்கும், உடல் எடை குறைப்பை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும். சோம்பில் அனெதோல் (Anethole) எனப்படும் சேர்மங்கள் உள்ளன. இவை நச்சுகளையும், அதிகப்படியான திரவங்களையும் வெளியேற்றி, நீர்தேக்கத்தை குறைக்க உதவுகின்றன. சோம்பு விதைகளை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில், இந்தத் தண்ணீரை வடிகட்டி, உங்கள் உணவுக்கு முன் குடிக்கவும். இது செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், நாள் முழுவதும் நீங்கள் இலகுவாகவும், ஆற்றலுடனும் உணர உதவுகிறது. மேலும், இது பசியைக் கட்டுப்படுத்தவும் துணைபுரியும்.
மேலும் படிக்க: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவும்
பாலை லேசாக சூடாக்கி, அதில் மஞ்சள், இலவங்கப்பட்டை தூள் மற்றும் ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். உங்கள் உடல், மஞ்சளில் உள்ள குர்குமினை (Curcumin) உறிந்து கொள்வதற்கு மிளகு உதவுகிறது. குர்குமின், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. பாலில் சேர்க்கப்பட்ட இலவங்கப்பட்டை, இன்சுலின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.
இந்த சத்துகள் அனைத்தும் சேர்ந்து, உடலில் கொழுப்பு சேர்வதை குறைத்து, ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன. இரவில் சூடான மஞ்சள் பால் அருந்துவது நிம்மதியான உறக்கத்திற்கும் வழிவகுக்கும்.
இந்த ஐந்து மூலிகை பானங்களும் உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தில் கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன. எனினும், இவை மட்டுமே உங்கள் உடல் எடை குறைப்பை நிறைவேற்றாது. ஆரோக்கியமான உணவு முறை மற்றும் சீரான உடற்பயிற்சி ஆகியவற்றுடன் சேர்த்து இந்த பானங்களை எடுத்துக் கொள்வது நன்மை அளிக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]