
நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க ஆற்றல் மிகவும் அவசியம். வேலை, உடற்பயிற்சி என எதுவாக இருந்தாலும், சில நேரங்களில் நாம் சோர்வாக உணர்வதுண்டு. அந்த சமயங்களில் புத்துணர்ச்சியை தரக்கூடிய சில உணவுகளை இதில் பார்க்கலாம். இவை உடனடியாக ஆற்றலை அதிகரித்து, சோர்வை போக்க உதவும்.
மேலும் படிக்க: Broccoli benefits in tamil: உங்கள் உணவில் ப்ரோக்கோலியை சேர்க்க வேண்டியதன் அவசியமும் அதன் நன்மைகளும்
வாழைப்பழத்தில் இயற்கை சர்க்கரைகள் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன. இவை உடனடி ஆற்றலை அளிப்பதுடன், அந்த ஆற்றல் நீண்ட நேரத்திற்கு நிலைத்திருக்கவும் உதவுகிறது. இதை காலை உணவாகவோ அல்லது மதிய உணவுக்கு பிறகு ஏற்படும் சோர்வை போக்கவோ சாப்பிடலாம்.

இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட பேரீச்சம்பழம், விரைவான ஆற்றலை தருகிறது. இதில் இரும்புச் சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது சோர்வை எதிர்த்து போராட உதவுகிறது. ஆரோக்கியமான சிற்றுண்டியாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
ஓட்ஸில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை ரத்த சர்க்கரை அளவில் திடீர் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தாமல், நிலையான ஆற்றலை வழங்குகின்றன. காலை நேரத்தில் ஓட்ஸ் சாப்பிடுவது நாள் முழுவதும் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.
மேலும் படிக்க: மழைக்காலத்தில் மூக்கடைப்பு, சைனஸ் தொல்லையா? இதோ எளிய தீர்வுகளும், தடுப்பு முறைகளும்!
பாதாமில் மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிக அளவில் உள்ளன. இது உடலுக்கு மெதுவாக ஆற்றலை வெளியிட்டு, நீண்ட நேரம் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிடுவது, உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும்.
ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் இயற்கை சர்க்கரை அதிக அளவில் உள்ளன. இது உடலுக்கு தேவையான, நீடித்த ஆற்றலை அளிக்கிறது. சிற்றுண்டியாக ஒரு ஆப்பிளை சாப்பிடுவது, நொறுக்கு தீனிகளை தவிர்த்து ஆரோக்கியமாக இருக்க உதவும்.

சியா விதைகளை ஊறவைத்து சாப்பிடும் போது, அது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிக்கிறது. மேலும், இதில் ஒமேகா-3 மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. இது சமநிலையான ஆற்றல் மேம்பாட்டிற்கு உதவுகிறது. இதை உங்கள் ஸ்மூத்தி அல்லது ஜூஸில் கலந்து சாப்பிடலாம்.
இத்தகைய பொருட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அன்றைய நாளுக்கான ஆற்றலுடன் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]