Broccoli benefits in tamil: ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய உணவுகளை அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில், ப்ரோக்கோலியை ஊட்டச்சத்துகளின் களஞ்சியம் என்று கூறலாம். இதில் வைட்டமின் சி, கே, ஏ, தாதுக்களான கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் சல்ஃபோரபேன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை நிறைவாக உள்ளன.
மேலும் படிக்க: Benefits of kalonji: கல்லீரலை பாதுகாக்கும் - நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்; கருஞ்சீரகத்தால் ஏற்படும் 5 முக்கிய நன்மைகள்
குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்தக் காய்கறி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. அதன்படி, ப்ரோக்கோலி மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று காண்போம்.
ப்ரோக்கோலியில் குறிப்பாக சல்ஃபோரபேன் (Sulforaphane) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் உள்ளது. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி, புற்றுநோய் மற்றுன் இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்.
ப்ரோக்கோலியில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை அனைத்தும் இருதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன. நார்ச்சத்து கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் ஒமேகா-3 அமிலங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைத் தடுக்கின்றன.
ப்ரோக்கோலியில் குளுக்கோசினோலேட்கள் (Glucosinolates) அதிகம் உள்ளன. இந்த சேர்மங்கள் உடலின் நச்சு நீக்கும் செயல்முறைகளை அதிகரிக்கின்றன. இவை கல்லீரலில் நச்சு நீக்கும் நொதிகளை தூண்டி, நச்சுக்ள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன.
மேலும் படிக்க: Kiwi Fruit Benefits in Tamil: ஆரோக்கியத்திற்கு கிவி பழத்தின் அற்புதமான நன்மைகள்
ப்ரோக்கோலியில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இது, நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக போராட அவசியமான வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது.
வலுவான எலும்புகளை பராமரிக்க தேவையான கால்சியம், வைட்டமின் கே மற்றும் மெக்னீசியம் ஆகியவை ப்ரோக்கோலியில் நிறைந்துள்ளன. எலும்பு திசுக்களின் முக்கிய கட்டுமான பொருளாக கால்சியம் உள்ளது. அதே நேரத்தில், வைட்டமின் கே கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது மற்றும் மெக்னீசியம் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது.
ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இது, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், வழக்கமான குடல் இயக்கத்தை எளிதாக்கவும் உதவுகிறது. மேலும், இது நன்மை செய்யும் குடல் பாக்டீரியாக்களுக்கு உணவாகவும் செயல்படுகிறது. இது செரிமான ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]