Ivy Gourd Benefits: கோவக்காயில் இருக்கும் இரண்டு முக்கிய மருத்துவ குணங்கள்

கோவக்காய் சுவை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் இது உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரக்கூடிய ஒரு சிறந்த காய்கறி

Ivy gourd big image

கோவக்காய் போன்ற பல காய்கறிகளை இயற்கை நமக்கு அருளியுள்ளது. இது நம் வயிற்றை நிரப்புவது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் மற்றும் கோடைக்காலம் வரும்போது பச்சைக் காய்கறிகளை விட சிறந்தது எதுவுமில்லை. கோடைக்காலத்தில் ஏராளமான பச்சைக் காய்கறிகள் சந்தையில் கிடைக்கும். இதில் ஒன்றுதான் கோவக்காய். இதன் ருசியை அதிகப்படியான மக்கள் விரும்பாவிட்டாலும் ஆனால் இதில் இருப்பதே சத்துக்களின் களஞ்சியம். இது பல உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதை உண்பது பல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும் அதன் அபாரமான இரண்டு நன்மைகளை பார்க்கலாம்.

கோவக்காய் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

நீரிழிவு நோயாளிக்கு நன்மை தரும் கோவக்காய்

diabetics pat inside

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் கோடையில் கோவக்காய் சிறந்த காய்கறியாக இருக்கும். இதனை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். கோவக்காய் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த அறியப்படும் இரத்தச் சர்க்கரைக் குறைவு விளைவைக் கொண்டுள்ளது. இதில் கார்போஹைட்ரேட்டின் அளவும் மிகக் குறைவு. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உட்கொள்வதால் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். இதனால் திடீரென ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பு ஏற்படாது.

மேலும் படிக்க: நடைப்பயிற்சி மூலமாக உடல் எடையை குறைக்க எளிய வழிகள்

ரத்தசோகைக்கு உதவும் கோவக்காய்

animea  inside

ரத்தசோகையால் அவதிப்பட்டாலும் கோவக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதில் நல்ல அளவு இரும்புச்சத்து உள்ளதால் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்சுவதை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

Image Credit- Freepik & Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP