சில தினங்களுக்கு முன்பு செர்பியா நாட்டின் பெல்கிரேட் நகரில் ஐரோப்பிய ஊட்டச்சத்து மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகள் நடத்திய மருத்துவ ஆய்வுகள் தொடர்பான சோதனை முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள கிங்ஸ் கல்லூரி உணவு பழக்கம் தொடர்பாக சமர்ப்பித்த சோதனை முடிவு அனைவரின் கவனத்தையும் பெற்றது
இடைப்பட்ட உண்ணாவிரதம் அல்லது உணவு உட்கொள்வதை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் வரம்பிடுவது மிகவும் பிரபலமான உடல் எடை குறைப்பு முறையாகும். இது எப்படி என்றால் தினமும் 10 மணி நேரத்திற்குள் மூன்று வேளை உணவையும் உட்கொள்ள வேண்டும்.
அதாவது காலை உணவை 9 மணிக்கு எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் இரவு உணவை 7 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் இடைப்பட்ட நேரத்தையே 14 மணி நேர விரதம் என்று கிங்ஸ் கல்லூரியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்கஆரோக்கியமான காலை உணவுக்கு தேடலா ? ராகி சில்லா சாப்பிடுங்க
இதை தொடர்ச்சியாக பின்பற்றியவர்களுக்கு பல பலன்கள் கிடைத்தன. உடலின் மனநிலை, சாப்பிடுவதற்கு முன்பான பசியின்மை, உறக்கம் ஆகியவை மேம்பட்டுள்ளன. இந்த சோதனை குறித்து கிங்ஸ் கல்லூரியின் மருத்துவர் சாரா பெர்ரி கூறுகையில் 10 மணி நேரத்திற்குள் மூன்று வேளை உணவையும் உட்கொள்ளும் முறையை சிலர் தொடர்ச்சியாக பின்பற்றாத காரணத்தால் அவர்களுக்கு பலன் கிடைக்கவில்லை, ஆனால் முறையாக பின்பற்றியவர்களுக்கு பலன்கள் கிடைத்தன எனக் கூறினார்.
இந்த சோதனையில் சுமார் 37,545 பேர் கலந்து கொண்டனர். முதல் வாரத்தில் அவர்கள் வழக்கம் போல் உணவு எடுத்துக்கொள்ளலாம் எனவும் அடுத்த இரு வாரங்களுக்கு 10 மணி நேரத்திற்குள் மூன்று வேளை உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிங்க உடல் ஆரோக்கியத்தை பெருக்கும் வெல்லம்!
36,231 பேர் அடுத்தடுத்த வாரங்களுக்கும் இதை பின்பற்றினர். 27,731 பேர் அதிக ஈடுபாடு காட்டியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 78% பேர் பெண்கள் என்றும் அவர்களது சராசரி வயது 60 என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவு உணவு பழக்கம் எவ்வளவு முக்கியம் என அனைவருக்கும் உணர்த்தி இருக்கிறது.
ஆரோக்கியமான உடல்நலத்திற்கு எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட எதை எப்படி சாப்பிடுகிறோம் என்பதே முக்கியமாகிறது. மேலும் உடல்நலத்திற்கு எப்போதும் சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இந்த நடைமுறையை பின்பற்றினால் உடல் எடை குறைப்பிலும் பலர் திருப்தியடைய வாய்ப்புண்டு.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation