Health Benefits of Jaggery : உடல் ஆரோக்கியத்தை பெருக்கும் வெல்லம்!

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட உடல் ஆரோக்கியத்திற்கு வெல்லம் மிகவும் உகந்தது. இதை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

Main jaggery

உணவில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை பயன்படுத்துவதை விட வெல்லம் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது இயற்கையானது மட்டுமின்றி மிகவும் ஆரோக்கியமானது. வெல்லத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் , தாதுக்கள் அனைத்தும் உள்ளன. குறிப்பாக வெல்லம் அதன் செரிமான பண்புகளுக்கு பெயர் பெற்றது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை தீர்க்கவும் வெல்லம் உதவுகிறது.

 jaggery

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவாகவும் வெல்லத்தை குறிப்பிடலாம். வெல்லம் நமக்கு சுவையை மட்டுமல்ல மகத்தான ஆரோக்கியத்தையும் தருகிறது. இதனால் குளிர்காலத்தில் கட்டாயமாக வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சளி மற்றும் இருமலுக்கு தீர்வு தரக்கூடிய வெல்லம் , குளிர்காலத்தில் உடல் வெப்பநிலையையும் கட்டுப்படுத்துகிறது.

இனிப்பு போளி ( குர் பரோட்டா )

வட இந்தியாவில் இனிப்பு போளி “குர் பரோட்டா” என்று அழைக்கப்படுகிறது. குர் பரோட்டா தயாரிக்க வெல்லம் பயன்படுத்தினால் நமது அன்றாட உணவு பழக்கத்தில் வெல்லம் எளிதாக சேர்க்கப்படும். இது சுவாச ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுகளையும் அழிக்கிறது. குழந்தைகளும் வெல்லத்தின் பலன்களை பெற குர் பரோட்டாவை கொடுக்கலாம்.

 jaggery

சர்க்கரைக்கு பதிலாக வெல்லம்

டீ மற்றும் காஃபிக்கு சர்க்கரை பயன்படுத்துவது பதிலாக வெல்லம் பயன்படுத்துங்கள். மிக சிறியளவு வெல்லமே போதுமானது. நீங்கள் டீ அல்லது காஃபியை அடிக்கடி அருந்தும் பழக்கம் கொண்டவராக இருந்தால் சர்க்கரையை தவிர்த்து விட்டு இயற்கையான இனிப்பு தரும் வெல்லத்திற்கு மாறுவது நல்லது.

உணவில் வெல்லத்தின் பயன்பாடு

அப்பம், ஓட்ஸ் போன்ற காலை உணவுகளில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்துங்கள். இனிப்பு வகைகளை தயாரிக்கும் போது சர்க்கரை பாகு பயன்படுத்துவதற்கு பதிலாக வெல்ல பாகு பயன்படுத்துங்கள். வெல்லத்தினை உருக்கி அதனுடன் வேர்க்கடலை, எள், முந்திரி அல்லது பாதாம் பருப்புகளை சேர்த்து நன்கு ஆறவைத்து விடுங்கள். அது மைசூர் பாக்கு போல் வந்ததுடன் சிறிதாக வெட்டி ருசியுங்கள்.

 jaggery

மேலும் படிங்ககுளிர்காலத்தில் புத்துணர்ச்சி அளிக்கும் டாப் 5 சூப்ஸ்

வெல்லத்தை நன்கு உருக்கி தயிருடன் கலந்து பிடித்தமான பழங்களை அதனுடன் சேருங்கள். சிறிது நேரம் கழித்து உட்கொண்டால் அது மிகவும் சுவையாக இருக்கும். சாக்லேட் தயாரிக்க கோகோ பவுடருடன் வெல்லம் பயன்படுத்துங்கள். இப்படி பல வகைகளில் வெல்லத்தினை உங்களது உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

எனினும் நீங்கள் மருத்துவ சிகிச்சை பெறுவராக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெற்று உணவில் வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP