
எந்த ஒரு செயலிலும் முழு ஈடுபாட்டுடன் இருப்பது மிகவும் அவசியம். ஆனால், இன்றைய சூழலில் அது பலரிடம் மிகக் குறைவாக காணப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்களும் கூறப்படுகின்றன.
கவனத்தை சிதறடிக்கும் விஷயங்கள் நிறைந்த உலகில், உங்கள் மனதை கூர்மைப்படுத்தி, ஒருமுகப்பட்ட கவனத்துடன் இருப்பது ஒரு மிகப்பெரிய திறனாகும். உங்கள் மூளையை சிறப்பாக கவனம் செலுத்த எப்படி பயிற்சி அளிக்கலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது ஒருவரின் செயல்திறனையும், கவனத்தையும் குறைக்கிறது. அதற்கு பதிலாக, உங்கள் மூளையை ஒரு வேலையில் மட்டும் முழு கவனத்துடன் ஈடுபட பழக்குங்கள். இதனால் உங்கள் கவனம் செலுத்தும் திறன் அதிகரிப்பதை நீங்கள் உணரலாம். ஒரு வேலையை முடித்த பின் அடுத்த வேலையை தொடங்குங்கள்.

மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு: பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய குறிப்புகள்
ஒருவரின் நினைவாற்றல், ஒருமுகப்பட்ட கவனம் மற்றும் அறிவாற்றல் செயல்பாடு ஆகியவற்றை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியம். நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால், உங்கள் மூளையால் எந்த ஒரு செயலிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாது. அதனால், தினமும் குறைந்தபட்சம் 7 முதல் 9 மணி நேரம் வரை தூங்க முயற்சிக்கவும்.
மேலும் படிக்க: Pregnant women health tips: நோய் தொற்று அபாயத்தை தடுக்க கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்
உடற்பயிற்சி செய்வது மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது ஒருவரின் விழிப்புணர்வையும், கவனத்தையும் மேம்படுத்துகிறது. மேலும், இது ஒருவரின் ஒட்டுமொத்த மனநிலையையும் மேம்படுத்தி, அன்றைய நாளை உற்சாகத்துடன் தொடங்க உதவுகிறது. தினமும் நடைபயிற்சி, யோகா அல்லது உங்களுக்கு பிடித்த வேறு ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை செய்யலாம்.

செல்போன் பயன்பாட்டை குறைப்பது, சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தை கட்டுப்படுத்துவது போன்றவை உங்கள் மூளைக்கு பயிற்சியளிக்க உதவும். இவ்வாறு செய்வதன் மூலம், நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக, நீங்கள் செய்யும் வேலையில் அதிக ஈடுபாட்டுடன் இருக்க உங்கள் மூளைக்கு நீங்களே பயிற்சி அளிக்கிறீர்கள் என்று அர்த்தம். கவனம் சிதறாமல் இருக்க, வேலை செய்யும் போது தொலைபேசியை தூரத்தில் வைக்கலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]