அன்பை வெளிப்படுத்த ஒரு நாள் மட்டும் போதுமா என்ன? இந்த கேள்வியை கேட்பவர்களே உண்மையான காதலர்கள். அன்பை வெளிப்படுத்த வருடத்தின் ஒரு நாளுக்காக காத்திருக்க வேண்டாம். ஏனெனில் நேரமும் காலமும் நமக்காக காத்திருக்க போவதில்லை. எனவே அன்பை வெளிப்படுத்த எப்போதும் தயங்காதீர்கள். திருமணம் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல காதல், தாய் தன் மகன் மீது வைத்திருப்பதும், ஒரு தந்தை மகள் மீது வைத்திருக்கும் கூட காதல் தான். எனவே உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருடன் சேர்ந்து இந்த காதலர் தினத்தை கொண்டாடுங்கள். காதலை வெளிப்படுத்த பிரத்தியேகமாக ஒரு நாளை தேர்ந்து எடுத்து கொண்டாடுகிறார்கள். இந்நாளில் காதலை இன்னும் அதிகமாக வெளிப்படுத்த வேண்டாமா? உணவை சமைத்து பரிமாறுவதும் அன்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும். எனவே பின்வரும் ரெசிபிக்களில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து, சமைத்து உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.
இது எங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும். உங்கள் அன்புக்குரியவருக்கு வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை கொண்டு சாக்லேட் கேக் செய்து கொடுக்கலாம். இதற்கு இதய வடிவத்தில் இருக்கும் கேக் மோல்டு தேவைப்படும். இந்த கேக்கின் நடுவே ஒரு சிறிய பகுதியை எடுத்துவிட்டு, நீங்கள் கொடுக்கப்போகும் பரிசை வைத்து பின் மறுபடியும் கேக்கால் மூடலாம். நீங்கள் கொடுக்கப் போகும் பரிசு சிறிய அளவில் இருந்தால், இது போன்ற கேக் செய்து உங்கள் துணையை ஆச்சரியப்படுத்தலாம். கேக் மீது சாக்லேட் சிரப் ஊற்றி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அலங்கரித்து கொள்ளலாம்.
இதை செய்வதற்கு சுண்ட காய்ச்சி இனிப்பு சேர்க்கப்பட்ட பாலில்(Condensed Milk) சாக்கோ சிப்ஸை சேர்த்து உருக்க வேண்டும். இதை நேரடியாக அடுப்பின் மீது வைத்து உருக்கக் கூடாது. கொதிக்கும் தண்ணீரின் மீது, சாக்கோ சிப்ஸ் மற்றும் சுண்டிய பால் கலவை உள்ள கிண்ணத்தை வைத்து உருக்கலாம். இதனை 1 மணி நேரம் அல்லது கெட்டியாகும் வரை குளிர வைக்கவும். பின் சிறிய உருண்டைகளாக உருட்டி கொக்கோ பவுடர் அல்லது துருவிய நட்ஸில் புரட்டி எடுத்து மீண்டும் ஒரு முறை குளிர்வித்து பரிமாறலாம்.
வெண்ணிலா ஐஸ்கிரீம், பால், வாழைப்பழம் மற்றும் ரோஜா குல்கந்து சேர்த்து ஸ்மூதி தயார் செய்து கொள்ளவும். இதில் சேர்க்கப்பட்டுள்ள ஐஸ்கிரீம் மற்றும் குல்கந்தில் இருக்கும் இனிப்பு சுவையே போதுமானது. இன்னும் அதிகமாக இனிப்பு தேவைப்பட்டால் தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். பிங்க் நிறத்தில் ரோஜா இதழ்களின் நறுமணத்துடன் இந்த வேலன்டைன் ஸ்மூதி வித்யாசமான நல்ல சுவையுடன் இருக்கும். நீங்கள் விரும்பினால் இதில் நட்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
உங்கள் கணவருக்கு பிடித்தமான ஃபிளேவரில் கப் கேக் செய்யலாம். உங்கள் காதல் அல்லது திருமணம் தொடங்கி எத்தனை ஆண்டுகள் நிறைவுப்பெற்றுள்ளது என்பதை பொறுத்து அதற்கு ஏற்ற எண்ணிக்கைகளில் கப் கேக்களை செய்யலாம்.
இப்போது பெரும்பாலனவர்கள் கோதுமை மாவு அல்லது சிறுதானிய மாவை கொண்டு வெவ்வேறு விதமாக ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே பீஸ்ஸா செய்து வருகின்றனர். இதில் கொஞ்சம் வித்யாசமாக பீஸ்ஸாவை இதய வடிவில் செய்து கொடுக்கலாம். உங்கள் அன்புக்குரியவருக்கு இதய வடிவிலான இந்த பீஸ்ஸாவை செய்து உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம்.
பிளைன் கேக்கை மூன்று பகுதிகளாக பிரித்து கட் செய்து கொள்ளவும். சிவப்பு நிற ரெட் வெல்வெட் கேக் என்றால் இன்னும் அழகாக இருக்கும். ஒவ்வொரு பகுதியின் மீதும் வெண்ணிலா ஐஸ்கிரீமை சாண்ட்விச் போல இடையில் வைத்து அடுத்த அடுக்கை வைக்கவும். இதில் உங்கள் கைவண்ணத்தையும், கற்பனை திறனையும் தாராளமாக காட்டலாம். உங்கள் கணவர் இனிப்பு பிரியராக இருந்தால் இதை நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்.
இந்த பதிவும் உதவலாம்: ரோஜா இதழ்களைக் கொண்டு ஐந்து தனித்துவமான ரெசிபிக்கள்
மேற்கூறிய ரெசிபிக்கள் உங்களுக்கு கடினமாக தோன்றினால் எளிமையான கேரட் ஹல்வா செய்யலாம். துருவிய கேரட்டுடன், பால் மற்றும் சர்க்கரை சேர்த்து பக்குவமாக வேக வைத்து ஹல்வா செய்ய வேண்டும். நீங்கள் ஏதேனும் எளிமையான இனிப்பு வகையை செய்ய ஆசைப்பட்டால் சுவை நிறைந்த இந்த கேரட் ஹல்வாவை உங்கள் அன்புக்குரியவருக்கு செய்து கொடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உலர்ந்த பழங்களை கொண்டு செய்யப்படும் அட்டகாசமான ரெசிபிக்கள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]