காதலர் தின கொண்டாட்டத்தில் நிறைய விஷயங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றம் அடைந்து இருந்தாலும், அன்றும் இன்றும் என்றும் காதலின் அடையாளமாக சிவப்பு ரோஜாக்கள் இருந்து வருகின்றன. உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கு ரோஜாக்களை கொடுப்பதுடன் வித்யாசமாக ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது! நீங்களும் உங்கள் துணையும் உணவு பிரியர்களாக இருந்தால் நிச்சயமாக இந்த ரெசிபிக்கள் உங்களுக்கு மனதுக்கு நெருக்கமாக இருக்கும். இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள ரோஸ் ரெசிபிக்களை உங்கள் அன்புக்குரியவர்களுக்கு செய்து கொடுத்து உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.
இதை செய்வதற்கு ஒரு நீளமான கண்ணாடி கிளாஸை எடுத்துக் கொள்ளவும். முதலில் ஊற வைத்த சப்ஜா விதைகளை சேர்க்கவும், பிறகு வேக வைத்த சேமியாவை ஒரு அடுக்காக சேர்க்கவும். இதன் மீது நறுக்கிய பழ கலவையை சேர்க்கலாம். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பழங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். பழங்களின் மீது துருவிய நட்ஸ் வகைகளை தாராளமாக சேர்க்கவும். இதில் குளிர்விக்கப்பட்ட ரோஸ் மில்க்கை பழங்கள் மூழ்கும் வரை ஊற்றவும். இறுதியாக ஒன்று அல்லது இரண்டு ஸ்கூப் ஐஸ்கிரீம்களை மேல் அடுக்கில் வைக்கவும். காய்ந்த ரோஜா இதழ்கள் மற்றும் நட்ஸ் தூவி பரிமாறலாம். இந்த ஃபலூடாவை நிச்சயம் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ரோஜா இதழின் நறுமணத்துடன் இந்த பாயாசம் குடிப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இதை செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் பாஸ்மதி அரிசியை நெய்யில் வறுக்க வேண்டும். இதை சூடு தணிந்த பின் லேசாக இடித்துக் கொள்ளலாம். இதை நன்கு பொடியாக்கினால் பாயசம் சுவையாக இருக்காது, எனவே மிக்ஸியில் பல்ஸ் மோடில் வைத்து ஒரு முறை மட்டும் அரைக்கவும். அரிசியை பால் மற்றும் தண்ணீர் கலவையில் நன்கு வேக விட வேண்டும். அரிசி வெந்த பிறகு பாயசத்திற்கு தேவையான சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். இப்போது காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து பாயசத்தை ஒரு கொதி விடவும்.
பாயசம் ரோஜா இதழ்களின் நிறத்தை பெற்று இளஞ்சிவப்பு நிறத்தில் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமான இருக்கும். நீங்கள் விரும்பினால் இதில் நெய்யில் வறுத்த உலர் பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
பொதுவாக விஷேஷ நாட்களில் முந்திரியை கொண்டு காஜு கட்லி அல்லது பர்ஃபி செய்வது வழக்கம். இதன் சுவைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர் பட்டாலம் இருக்கிறார்கள். இதில் கூடுதலாக ரோஸ் சிரப் சேர்த்து காஜூ ரோஸ் பர்ஃபி செய்யலாம். இதை செய்வதற்கு ஒரு கப் முந்திரியை பொடித்துக் கொள்ளவும். பின் ஒரு கடாயில் ½ கப் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சர்க்கரையை கரைத்துக் கொள்ளவும். இது ஒரு கம்பி பாகு வந்த பிறகு, அரைத்து வைத்துள்ள முந்திரி மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும் பொழுது இரண்டு டீஸ்பூன் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். இதனை நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி, வேண்டிய வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறலாம்.
எப்போதும் பேன் கேக் செய்வதை போல கோதுமை மாவு, முட்டை, சர்க்கரை, பேக்கிங் பவுடர், ஏலக்காய் பொடி அல்லது வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மாவு தயார் செய்து கொள்ளவும். முட்டை சேர்க்க விருப்பமில்லாதவர்கள் முட்டைக்கு பதிலாக வாழை பழங்களையும் சேர்க்கலாம். இந்த மாவு கலவையில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து சிறிய பேன் கேக்குகளாக ஊற்றி வேகவிடவும். சிறிதளவு வெண்ணெய் சேர்த்து இருபுறமும் பொன் நிறமாக வரும் வரை வேக வைக்கவும். இதன் மீது சிறிதளவு தேன் ஊற்றி, காய்ந்த ரோஜா இதழ்கள் தூவி பரிமாறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உலர்ந்த பழங்களை கொண்டு செய்யப்படும் அட்டகாசமான ரெசிபிக்கள்
முதலில் தேவையான அளவு பாஸ்மதி அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு இதனை தண்ணீர் இல்லாமல் வடித்து கொள்ளவும். இப்போது ஒரு குக்கர் அல்லது பாத்திரத்தில், வெண்ணெயுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து வறுக்கவும். 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் என்ற கணக்கில் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மற்றும் குங்குமப்பூ சேர்த்து தட்டு வைத்து மூடவும். இதனை குறைந்த தீயில் 15 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.
இறுதியாக ரோஸ் வாட்டர் மற்றும் காந்த ரோஜா இதழ்கள் சேர்த்து லேசாக கிளறவும். புலாவ் ரோஸ் மற்றும் குங்குமப்பூவின் நறுமணத்துடன், சுவை நிறைந்ததாகவும் இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: திகட்டாத சுவை..திருவையாறு ஸ்பெஷல் அசோகா அல்வா
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]