குளிர்காலத்தில் நம் உடலை சூடாக வைத்து கொள்ளும் உணவு பொருட்களை அதிக சாப்பிடுகிறோம். இதில் உலர்ந்த பழங்களும் ஒன்று. இவை குளிர்காலத்தில் உடலுக்கு உஷ்ணத்தை தருவதுடன் பல்வேறு வகையான நார்ச்சத்து மற்றும் தாதுப்பொருட்களையும் வழங்குகின்றன. உலர்ந்த பழங்களை சில நேரங்களில் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவோம். சில சமயங்களில் அப்ப்டியே வாயில் போட்டு சாப்பிடுவோம். ஆனால் உலர்ந்த பழங்களை எப்போதாவது சமைத்து சாப்பிட்டு இருக்கீங்களா? உலர்ந்த பழங்களை வைத்து டேஸ்டியான பல ரெசிப்பிகளை செய்யலாம். உலர்ந்த பழங்களிலிருந்து செய்யப்படும் ரெசிபிக்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
நீங்கள் சுரைக்காய் கோஃப்தாவை சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் ஒருமுறை இந்த குளிர்காலத்தில் வேக வைத்த பாதாம் கோஃப்தாவை வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள். உருளைக்கிழங்கு மற்றும் பாதாம் கலவை சேர்த்து செய்யப்படும் இந்த கோஃப்தா மிகவும் சுவையாக இருக்கும்.
வெறும் பாதாம் மட்டுமில்லை இதில் மற்ற உலர்ந்த பழங்களையும் நீங்கள் சேர்க்கலாம். பொடியாக நறுக்கிய வெங்காயம், க்ரீன் மற்றும் ரெட் சட்னியுடன் இந்த கோஃப்தாவை பரிமாறினால் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் நிச்சயம் வாவ் சொல்வார்கள். இந்த வேக வைத்த பாதாம் கோஃப்தாவை கண்டிப்பாக ஒருமுறை செய்து பாருங்கள்.
கேக் யாருக்கு தான் பிடிக்காது. அதில் பழங்கள், நட்ஸ், உலந்த பழங்கள் சேர்த்தால் இன்னும் டேஸ்ட்டாக இருக்கும்.பிளம் கேக் பழங்கள் மற்றும் உலர் பழங்களை கொண்டு பல வகைகளில் செய்யப்படுகிறது. இது சாப்பிடுவதற்கு சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. பிளம் கேக்கை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முடிந்தால் இந்த புத்தாண்டுக்கு வீட்டிலேயே பிளம் கேக் செய்து அனைவருடனும் உண்டு மகிழுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்:ஹோட்டல் சுவையில் அட்டகாசமான வத்தக் குழம்பு
நீங்கள் தேங்காய் பர்பி மற்றும் வேர்க்கடலை பர்பி சாப்பிட்டு இருப்பீர்கள். இந்த குளிர்காலத்தில் வேர்க்கடலை பர்பி அதிகம் விரும்பி சாப்பிடப்படுகிறது. உலர் பழங்களை வைத்தும் பர்பி செய்யலாம். இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். எல்லா வகையான உலர் பழங்களும் இதில் சமமான அளவு சேர்க்கப்படுகிறது. இந்த பர்பியில் வெல்லத்திற்கு பதிலாக பேரிச்சம்பழத்தையும் பயன்படுத்தலாம். உங்களுக்கும் பர்பி மிக்வும் பிடிக்கும் என்றால் உலர்ந்த பழங்களில் செய்யப்படும் இந்த பர்பியை வீட்டில் நிச்சயம் செய்து பாருங்கள்.
கபாப்களை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு அத்திப்பழ கபாப் மிக சிறந்த தேர்வு.காய்ந்த அத்திப்பழங்கள் உருண்டை வடிவில் கடைகளில் விற்கப்படுகின்றன. இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. கபாப் செய்யும் போது இதில் பனீரையும் சேர்த்து பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பினால் கபாப்பின் ருசியை அதிகரிக்க இதில் உலர்ந்த பழங்கள் மற்றும் எள்ளையும் சேர்த்து கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்:அட்டகாசமான ஊறுகாய் ரெசிபி வீட்டிலேயே செய்யலாம்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]