தென்னிந்திய உணவில் ஊறுகாய்க்கு எப்போதுமே இடம் உண்டு. நம் வீட்டில் இருக்கும் பாட்டிமார்கள் குளிர்காலத்தில் அடிக்கும் வெயிலில் தான் ஊறுகாய் போடும் மாங்காய், எலுமிச்சை பழங்களை காய வைப்பார்கள். அப்போது தான் அது சரியான பதத்தில் பழுத்து வரும். நம் வீடுகளில் அனைத்து உணவுகளுடனும் ஊறுகாய் பரிமாறப்படுகிறது. உணவின் சுவை எப்படி இருந்தாலும் சரி, அதனுடன் ஊறுகாய் இருந்தால் போதும் .சுவை பன்மடங்கு அதிகமாகி விடும். பராத்தா முதல் சாதாரண அரிசி பருப்பு சாதம் வரை எல்லா உணவுகளுடனும் ஊறுகாய் விரும்பி உண்ணப்படுகிறது. காரம் விரும்பி சாப்பிடுபவர்கள் ஊறுகாயை சேர்த்து கொள்வார்கள். இன்னும் சிலருக்கு காய்கறி பொரியல் போல ஊறுகாய்.
வீட்டில் காய்கறிகள் சமைக்காத போதெல்லாம், அம்மா உடனே சாப்பாட்டுக்கு சைடிஷாக வைப்பது ஊறுகாயை தான். இன்றும் பல வீடுகளில் ஊறுகாய் போடப்படுகிறது. அதே நேரம் அதற்கு நிறைய நேரமும் எடுக்கிறது. ஆனால் இனி அப்படி இல்லை. மாறிவரும் இந்த அவசர உலகத்தில் ஊறுகாயை விரைவில் தயாரித்து விடலாம்.
இந்த பதிவில் நீங்கள் உடனடியாக தயாரிக்கக்கூடிய சில ஊறுகாய் ரெசிபிக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். மாங்காய் முதல் கேரட் என வித்தியாசமான இந்த ஊறுகாய் ரெசிபிக்கள் நிச்சயம் உங்கள் வாயில் எச்சில் ஊற வைக்கும்.
இந்த பதிவும் உதவலாம்:காரசாரமான மிளகு ரசம் இப்படி செய்யுங்கள்
வெள்ளரிக்காய் ஊறுகாய் செய்ய உங்களுக்கு மிகவும் அடிப்படையான பொருட்கள் மட்டுமே தேவைப்படும். வெறும் 20 நிமிடங்களில் இந்த ஊறுகாயை தயார் செய்துவிடலாம். எப்படி செய்வது? என பார்ப்போம் வாருங்கள்.
ஆந்திர சமையலில் தக்காளி ஊறுகாய் மிகவும் பிரபலம். இது உலர்ந்த தக்காளியை வைத்து தயாரிக்கப்படுகிறது. விரைவில் செய்யக்கூடிய இந்த ஊறுகாயின் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
இஞ்சி ஊறுகாயின் ருசி சற்று காரமாகவும் வித்தியாசமாகவும் இருக்கலாம். ஆனால் குளிர்காலத்தில் இந்த ஊறுகாய் செரிமானத்திற்கு உதவுகிறது. வாருங்கள் இப்போது செய்முறையை பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்:குடியரசு தின ரெசிபி மூன்று வண்ணத்தில் அசத்தலான சட்னி
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]