herzindagi
rasam tamil

Rasam Recipe in Tamil: காரசாரமான மிளகு ரசம் இப்படி செய்யுங்கள்

குளிர்காலத்துக்கு ஏற்ற  காரசாரமான மிளகு ரசம் செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்  வாருங்கள். 
Editorial
Updated:- 2023-01-22, 21:26 IST

உணவே மருந்து என்பது போல் குளிர்காலத்தில் ஏற்படும் சளி, ஜலதோஷத்தை விரட்டும் அற மருந்து ரசம். ரசத்தில் பல வகையுண்டு. குறிப்பாக குளிர்காலத்தில் பெரும்பாலான அம்மாக்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது வீட்டில் மிளகு ரசம் வைப்பார்கள். சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதை காட்டிலும் ஒரு டம்ளரில் ரசத்தை ஊற்றி குடித்தாலே போதும். சளியில் இருந்து உடனti நிவாரணம் கிடைக்கும்.

ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம் ஆகியவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இந்த பதிவில் மிளகு ரசம் செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • கரு மிளகு – 2 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
  • தக்காளி- 2
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • பூண்டு – 6 பல்
  • காய்ந்த சிவப்பு மிளகாய் – 2
  • வெந்தயம் - 1/8 டீஸ்பூன்

இந்த பதிவும் உதவலாம்: வீட்டிலேயே அட்டகாசமான சுவையில் பீட்சா செய்யுங்கள்

  • பெருங்காயத்தூள் – 1/8 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • கடுகு- 1/8 டீஸ்பூன்
  • எண்ணெய்- 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

mlagu rasam

செய்முறை

  • முதலில் மிளகு மற்றும் சீரகத்தை பொடியாக்கி அதனுடன் பூண்டு பல் சேர்த்து மிக்ஸி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.
  • அதன் பின்பு புளியை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். அதே போல் ஒரு பாத்திரத்தில் தக்காளியை நன்கு பிசைந்து கரைத்து எடுத்து கொள்ளவும்.
  • இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
  • பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மிளகு – சீரகம் சேர்த்து வதக்கி அதில் தக்காளி கரைசலை சேர்க்கவும். இவை நன்கு வதங்கி வாசனை வர தொடங்கியதும் அதில் புளி தண்ணீரை வடிக்கட்டி சேர்க்கவும்.
  • இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து கொதி வரும் வரை காத்திருக்கவும். நினைவில் கொள்ளுங்கள் எப்பொதுமே ரசம் அதிகம் கொதிக்க கூடாது. முதல் கொதி வந்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் போதும். சுவையான மிளகு ரசம் தயார்.

இந்த பதிவும் உதவலாம்:மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]