herzindagi
pizza making

Pizza Recipe in Tamil: வீட்டிலேயே அட்டகாசமான சுவையில் பீட்சா செய்யுங்கள்

வீட்டிலேயே அட்டகாசமான சுவையில் பீட்சா செய்வது எப்படி? என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 
Editorial
Updated:- 2023-01-20, 08:00 IST

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான துரித உணவாக பார்க்கப்படும் பீட்சா, இத்தாலி ஏழை மக்களின் உணவாக முதன் முதலில் தோன்றியது. பின்பு பொருளாதார முன்னேற்றம், நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த பின்பு, பீட்சா உலக உணவாக அவதாரம் எடுத்தது. ஆரம்பகாலத்தில் தட்டையான ரொட்டிகளில் காய்கறிகள் மற்றும் சுவையூட்டிகளை சேர்த்து, மக்கள் அதற்கு பீட்சா என பெயர் சாப்பிட்டனர். நாளடைவில் உணவகங்கள் பீட்சாவில் பல வெரைட்டிகளை அறிமுகம் செய்து எல்லா தரப்பினரையும் பீட்சா பக்கம் திரும்ப வைத்தன.

புதிய சமையல் பொருட்கள் உள்ளூர் சுவைக்கேற்ப பீட்சாவில் சேர்க்கப்பட்டன. இத்தாலியன் பீட்சா, அமெரிக்கன் பீட்சா என நாடுகளுக்கு ஏற்ப சுவையை மாற்றி பீட்சா வகைகளும் பிரிக்கப்பட்டன. பீட்சாவில் பல வகையுண்டு. தந்தூரி சிக்கன் பீட்சா, சாஸ் பீட்சா, வீட் பீட்சா, சீஸ், வெஜ், நான் வெஜ், வெஜ், பாஸ்தா பீட்சா என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆரம்பத்தில் இந்தியாவில் பீட்சாவின் ருசி பலருக்கும் பிடிக்கவில்லை. அதன் பின்பு இந்திய உணவுக்கு ஏற்றார் போல் சில மாற்றங்களுடன் பலவகையான பீட்சாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

பின்பு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வீட்டிலேயே ஆர்டர் செய்து சாப்பிடும் அளவுக்கு பீட்சா பலருக்கும் விருப்பமான உணவாக மாறிவிட்டது. அந்த வகையில், இந்த பதிவில் வீட்டிலேயே வெஜ் பீட்சா செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

  • ஈஸ்ட் – 1 ½ டீஸ்பூன்
  • சர்க்கரை – 2 டீஸ்பூன்
  • மைதா மாவு – 2 1/2 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • காய்கறி கலவைகள் – 1 கப்
  • பீட்சா சாஸ் – தேவையான அளவு
  • துருவிய சீஸ் – 1 கப்

pizza

செய்முறை

  • முதலில் அகலமான பாத்திரத்தில் 1 கப் வெதுவெதுப்பான நீர், ஈஸ்ட், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின்பு, இந்த கலவையை 5 நிமிடம் ஊற விடவும். ஈஸ்ட் பொங்கி மேலே மிதக்கும்.
  • அடுத்து, பாத்திரத்தில் மைதா மாவு , எண்ணெய், உப்பு சேர்த்து அதனுடன் ஊற வைத்த ஈஸ்ட் தண்ணீரை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசையவும்.
  • சரியாக மாவை 10 நிமிடம் சாஃப்ட்டாக பிசைந்து எடுக்கவும்.
  • பின்பு, அதன் மேல் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஈரமான துணியால் மூடி 2 மணி நேரம் ஊற விடவும்.

இந்த பதிவும் உதவலாம்:கேஎஃப்சி சிக்கன் இனி வீட்டிலேயே செய்யலாம்

  • மாவு நன்கு ஊறி பொங்கி வந்து இருக்கும்.
  • இப்போது அடுப்பில் குக்கரை வைத்து அதில் 2 கப் உப்பு சேர்க்கவும்.
  • பின்பு, அதன் மேல் ஸ்டாண்டை வைத்து குக்கரை விசில் போடாமல் மூடி 15 நிமிடம் சூடுப்படுத்தவும்.
  • இதற்கிடையில் பீட்சாவை தயார் செய்து கொள்ளவும்.

பீட்சா ரெடி

  • ஊற வைத்த மாவை தட்டில் வைத்து வட்டமாக தட்டவும்.
  • பின்பு அதன் மேல் பீட்சா சாஸை பக்குவமாய் தடவவும்.
  • இப்போது அதன் மேல் நறுக்கிய காய்கறிகள் (மஷ்ரூம், குடை மிளகாய், வெங்காயம், ஆலீவ்ஸ்) ஆகியவற்றை தேவைக்கேற்ப சேர்க்கவும்.
  • இறுதியாக அதன் மேல், சீஸ் தூவி தட்டுடன் அப்படியே குக்கருக்குள் இருக்கும் ஸ்டாண்டில் வைக்கவும்.
  • குக்கரை மறுபடியும் மூடி விசில் போடாமல் 20 நிமிடம் வேக விடவும்.
  • அட்டகாசமான வெஜ் பீட்சா தயார்.

இந்த பதிவும் உதவலாம்:மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகர்தண்டா

நீங்களும் இந்த செய்முறையை பின்பற்றி வீட்டிலேயே பீட்சா செய்து பாருங்கள். நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]