herzindagi
kfc chicken recipe

KFC Chicken Recipe: கேஎஃப்சி சிக்கன் இனி வீட்டிலேயே செய்யலாம்

வீட்டிலேயே கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் செய்வது எப்படி? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
Editorial
Updated:- 2023-01-15, 16:43 IST

ஃப்ரைடு சிக்கன் எனச் சொல்லப்படும் கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் பெயரை கேட்டாலே, நாவில் எச்சில் ஊறும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போது அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான உணவு பட்டியலில் கேஎஃப்சி சிக்கன் முதலிடத்தில் உள்ளது. பர்த்டே பார்ட்டி தொடங்கி கெட் டூ கெதர் வரை கேஎஃப்சி சிக்கன் இல்லாமல் கொண்டாட்டங்கள் முழுமையடைவதில்லை. அதே போல் மாலை நேர ஸ்நாக்ஸாகவும் கேஎஃப்சி சிக்கன்கள் அதிகளவில் ஆர்டர் செய்யப்படுகின்றன. விடுமுறை நாட்களில் கூலாக வீட்டில் இருந்தப்படி, குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்கும் கேஎஃப்சி சிக்கன்கள் தேவைப்படுக்கின்றன.

அடிக்கடி வெளி உணவுகளை வாங்கி சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு கெடுதல் விளைவிக்கும். அதற்காக சாப்பிடாமலும் இருக்க முடியாது. இதற்கு சிறந்த தீர்வு வீட்டிலேயே செய்து சாப்பிடுவது.

வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும் இருக்கும், குழந்தைகளுக்கும் பயப்படாமல் கொடுக்கலாம். எனவே, இந்த பதிவில் வீட்டிலேயே கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் செய்வது எப்படி? என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • தயிர் - 1/2 கப்
  • பால் - 1 கப்
  • முட்டை - 1
  • இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்
  • பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 2 டீஸ்பூன்

இந்த பதிவும் உதவலாம்: சுவையான பிரட் அல்வா செய்வது எப்படி?

  • உப்பு – தேவையான அளவு
  • எலுமிச்சை சாறு – ½ பழம்
  • கோழி துண்டுகள் – 8
  • மைதா - 1 கப்
  • சோள மாவு - 1/2 கப்
  • தனியா தூள் – ½ டீஸ்பூன்
  • சீரக தூள் - 1/2 டீஸ்பூன்
  • பூண்டு தூள் – 1 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு

fried chicken

செய்முறை

  • முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர் மற்றும் பாலுடன் முட்டையை உடைத்து ஊற்றவும்.
  • பின்பு அதனுடன், இஞ்சி விழுது, பூண்டு விழுது, 2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் மிளகு தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
  • இப்போது அதில் கோழி துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து ஃபிரிட்ஜில் வைத்து 2 மணி நேரம் அப்படியே ஊற விடவும்.
  • பின்பு, தட்டில் மைதா, சோள மாவு, தனியா தூள், சீரக தூள், பூண்டு தூள், 1 டீஸ்பூன் மிளகு தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
  • இதில் ஊற வைத்துள்ள கோழி துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • இப்போது காய்ந்த எண்ணெயில் கோழி துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான கேஎஃப்சி பிரைடு சிக்கன் தயார்.

இந்த பதிவும் உதவலாம்:மதுரை ஜிகர்தண்டா செய்வது எப்படி?

நீங்களும் விடுமுறை நாட்களில் இந்த செய்முறையை பின்பற்றி வீட்டிலேயே சுவையான கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் செய்து பாருங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]