herzindagi
halwa recipe

Bread Halwa Recipe in Tamil : சுவையான பிரட் அல்வா செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பிரட் அல்வா வீட்டிலேயே செய்வது எப்படி? என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 
Editorial
Updated:- 2023-01-16, 10:02 IST

அல்வா என்று சொன்னாலே நாக்கில் எச்சில் ஊறும். அதிலும் பிரட் அல்வா என்றால் கேட்கவா வேண்டும். பிரியாணி சாப்பிட்ட பிறகு கடைசியாக பிரட் அல்வாவை எடுத்து, ஆற அமர்ந்து அதை பொறுமையாக ரசித்து சாப்பிடும் ருசியே அலாதியானது.. அதிலும் கல்யாண வீட்டு பிரட் அல்வாவின் வாசனை, இலையில் பரிமாறும் போதே ஆளை சுண்டி இழுக்கும். இதுமட்டுமா, சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் பல ஹோட்டல்களில் பிரட் அல்வா சிச்னேச்சர் ரெசிபியாகவும் உள்ளது.

ஜாமூன், பாயாசம் வரிசையில் தற்போது ஹோட்டல் மற்றும் திருமணங்களில் பிரட் அல்வா அதிகம் பரிமாறப்படுகிறது. இவை செய்வதற்கான நேரமும் மிக மிக குறைவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பிரட் அல்வாவை வீட்டில் இதுவரை செய்து பார்த்து இருக்கீங்களா? அல்லது பண்டிகை நாட்களில் செய்ய வேண்டும் என எண்ணம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறதா? அப்படியென்றால் உங்களுக்கு இந்த பதிவு கட்டாயம் உதவும். பிரட் அல்வா செய்முறையை இந்த பதிவில் பகிர்கிறோம். படித்து பயனடையுங்கள்.

halwa making

தேவையான பொருட்கள்

  • பால் - 2 கப்
  • பிரட் - 8 துண்டு
  • நெய் - 2 டீஸ்பூன்
  • முந்திரி - 10
  • திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை - 3/4 கப்
  • ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்

இந்த பதிவும் உதவலாம்:சிறந்த காலை நேர டிபன்! வெண் பொங்கல் செய்வது எப்படி?

செய்முறை

  • முதலில் பிரட் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து நன்கு பொடியாக்கி கொள்ளவும்.
  • இப்போது அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
  • பால் சுண்டி கெட்டியான கோவா பதத்திற்கு வந்ததும் அதை தனியாக எடுத்து கொள்ளவும்.
  • பின்பு, அடுப்பில் கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • இப்போது அதே கடாயில் சர்க்கரை சேர்த்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கரைய விடவும். கலவை கொதிக்க தொடங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள பிரட் தூளை சேர்க்கவும்.
  • இவற்றை நன்கு கலந்து விடவும். அப்போது தான் பிரட்டில் சர்க்கரை ஜீரா ஒன்றொடு ஒன்று சேரும்.
  • பின்பு, அதில் காய்ச்சி வைத்துள்ள கெட்டியான பாலை சேர்த்து அல்வா பதத்திற்கு கிளறவும். அதில் எண்ணெய் சேர்த்து கடாயில் ஒட்டாமல் பக்குவமாய் கிளறவும்.

இந்த பதிவும் உதவலாம்:திருப்பதி லட்டு எப்படி செய்யப்படுகிறது என தெரியுமா?

  • இறுதியாக ஏலக்காய் தூள் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேர்க்கவும்.
  • வாசனைக்கு கடைசியாக சிறிதளவு நெய் ஊற்றி இறக்கினால் சூப்பரான பிரட் அல்வா தயார்.

நீங்களும், இந்த செய்முறையை பின்பற்றி அசத்தலான பிரட் அல்வா வீட்டிலேயே செய்து பாருங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]