herzindagi
pongal recipe

சிறந்த காலை நேர டிபன்! வெண் பொங்கல் செய்வது எப்படி?

தென்னிந்திய உணவின் சிறந்த காலை நேர டிபனான வெண் பொங்கல் செய்வது எப்படி? என்பதை இப்போது பார்ப்போம். 
Editorial
Updated:- 2023-01-11, 12:51 IST

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலை நேரத்தில் எடுத்து கொள்ளும் போது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றல் சீராக கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக ஆவியில் வேக வைக்கப்படும் இட்லி, புட்டு, இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகள் உடலுக்கு மிகவும் தேவை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்கின்றனர்.

இந்த காலை உணவு பட்டியலில் பலருக்கும் மிகவும் பிடித்தமான மெனு வெண் பொங்கல். இதில் சமச்சீரான சத்துகள் நிறைந்துள்ளன. பொங்கலுக்கான சரியான இணை இன்று வரை சாம்பார் மட்டுமே. அடுத்தது தேங்காய் சட்னி. இதனுடன் சூடான மொறு மொறுப்பான மெதுவடை சிறந்த சைடிஷாக பார்க்கப்படுகிறது. சுடச்சுட பொங்கலை அள்ளி சாப்பிடும் போது மிளகும் முந்திரியும் மாறி மாறி வந்தால் நாக்குக்கு திவ்யமாக இருக்கும். முந்திரியை தனியே வறுத்து பொங்கலில் சேர்த்தால் அதன் ருசி இன்னும் அதிகமாகும்.

அதே நேரம் பொங்கல் சாப்பிட்டால் மந்தமாக இருக்கும், தூக்கம் வரும் என்ற விவாதமும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இதிலிருக்கும் ருசி அதையெல்லாம் மறைத்து விடுகிறது. சரி வாருங்கள், அருமையான வெண் பொங்கல் வீட்டிலேயே செய்வது எப்படி? என்பதை இப்போது பார்ப்போம்.

pongal tiffin.

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – 1 கப்
  • பாசிப்பருப்பு – ½ கப்
  • மிளகு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • இஞ்சி- 1 துண்டு
  • பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2-3
  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி பருப்பு – சிறிதளவு

இந்த பதிவும் உதவலாம்: சப்பாத்திக்கு ஏற்ற சூப்பரான குடைமிளகாய் குருமா

செய்முறை

  • முதலில் அரிசி மற்றும் பருப்பை மிதமான சூட்டில் 2 நிமிடம் வறுத்து எடுத்து, பின்பு அதில் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  • பின்பு அடுப்பில் குக்கரை வைத்து அதில் நெய் ஊற்றி பெருங்காயத்தூள், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  • இப்போது அதில் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீரில் நன்கு அலசிவிட்டு சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து சரியாக 5 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  • குக்கரில் 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • இப்போது பொங்கல் நன்கு குழைந்து வெந்து இருக்கும்.
  • அடுத்து, அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சிறிதளவு முந்திரி சேர்த்து வறுக்கவும்.
  • அதனுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை பொங்கலில் சேர்த்து நன்கு கிளறவும்.
  • அருமையான வெண் பொங்கல் தயார். விருப்பப்பட்டால் பொங்கல் மேல் இன்னும் சிறிதளவு நெய் சேர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்:சுவைத்து மகிழுங்கள்! பெங்களூரு ஸ்பெஷல் தட்டு இட்லி!

இந்த செய்முறையைப் பின்பற்றி நீங்களும் டேஸ்டியான வெண் பொங்கலை வீட்டிலேயே செய்யுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]