தென்னிந்திய உணவுகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்தியாவில் பரந்து விரிந்து இருக்கும் உணவு கலாச்சாரம், நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. விதவிதமான சிற்றுண்டி உணவுகள், சாலையோர உணவுகள், நகர்ப்புற உணவுகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டாலும் அதன் சுவை பிடித்து விட்டால் போதும், உலகம் முழுவதும் அதற்கு கிளைகள் தொடங்கப்பட்டு விடும். கடந்த சில ஆண்டுகளாக உணவு பிரியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
வித்தியாசமான, ருசியான உணவுகளை தேடி சென்று உண்டு மகிழும் வழக்கம் அதிகரித்து வருகிறது. போதாத குறைக்கு தெருவுக்கு தெரு food bloggers இருப்பதால் அவர்கள் எல்லா உணவுகளையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றனர். இதனால், அந்த உணவுகளை டேஸ்ட் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வந்து விடுகிறது. ஆனால் எந்தவித புரமோஷனும் இல்லாமல் பல ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுவதும் அறியப்பட்ட உணவு பெங்களூரு தட்டு இட்லி. இன்றளவும் இந்த உணவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
பெங்களூருவில் உணவு தெருக்கள் ஏராளம். ஒவ்வொரு தெருவும் ஒவ்வொரு உணவிற்கு பெயர் பெற்றது. குறிப்பாக பெங்களூரு சட்னி வகைகளின் ருசி எளிதில் நாக்கை விட்டு அகலாது. ஒருவிதமான புளிப்பு, இனிப்பு, காரத்துடன் நம் நாக்கை அடிமையாக்கும். அந்த வகையில் பெங்களூரு சென்றால் கண்டிப்பாக மிஸ் செய்யக்கூடாத உணவு பட்டியலில் முதலிடம் பிடிப்பது தட்டு இட்லி.
வீட்டில் சாதாரணமாக இட்லி சுடும் மாவிலேயே இந்த இட்லியும் சுடப்படுகிறது. இதன் சுவையை கூட்ட 2 விதமான சட்னியுடன் பரிமாறப்படுகிறது. தட்டு இட்லியுடன், இட்லி பொடி மற்றும் நெய்யும் வழங்கப்படும். மாலை நேரத்தில் பெங்களூரு சாலையோர கடைகளில் தட்டு இட்லி வியாபாரம் அனல் பறக்கும். ஒருமுறை சாப்பிட்டவர்கள் அடுத்த முறை தேடி வந்து சாப்பிடுவார்கள். இந்த தட்டு இட்லியை வீட்டிலேயே செய்யலாம். அதன் செய்முறையை இங்கு பகிர்கிறோம். படித்து பயனடையுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: கும்பகோணம் டிகிரி காபி போடுவது எப்படி என தெரியுமா?
இந்த பதிவும் உதவலாம்:சப்பாத்திக்கு ஏற்ற சூப்பரான குடைமிளகாய் குருமா!
நீங்களும் இந்த செய்முறையை பின்பற்றி வீட்டிலேயே தட்டு இட்லி செய்து பாருங்கள். நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]