இட்லி, தோசை முதல் சாம்பார் வரை தென்னிந்திய உணவு வகைகள் அனைத்தும் ஆரோக்கியம் நிறைந்தாகக் கருதப்படுகிறது. ஆவியில் வேக வைக்கும் இட்லியை காலை உணவாக எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். தமிழர்கள் காலை உணவுக்கு முக்கியத்தும் கொடுப்பது போல மாலை நேர டிபனும் அவர்களின் வாழ்வியலுடன் கலந்து விட்டது. ஒரு சில நகரங்களில் மாலை நேர டிபன் பழக்கம் இல்லாமல் இருக்கலாம். அதிகப்பட்சமாக வடை, சமோசா, பஜ்ஜி இதை சாப்பிட்டு விட்டு டீ குடிக்கும் பழக்கம் இருக்கலாம்.
ஆனால் காரைக்குடி, கோயம்புத்தூர், திருச்சி பக்கம் ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் மாலை நேர டிபன் தயார் செய்யப்படும். ஒரு 5 மணிபோல் சரியாக, டீ குடிப்பதற்கு முன்பு சுடசுட பணியாரம், அடை, ராகி தோசை, சுண்டல் என தினமும் விதவிதமான மெனு மாலை நேர டிபனில் இடம்பெறும். அதிலும் பணியாரத்தில் இனிப்பு, காரம், முட்டை பணியாரம் என சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த பதிவை வாசிக்கும் போது பணியாரம் நம் கண்முன் வந்து போகலாம். அப்படி பணியாரம் சாப்பிட ஆசைப்படுபவர்கள் இந்த செய்முறையைப் பின்பற்றி வீட்டிலேயே செட்டிநாடு குழிப்பணியாரம் செய்து அசத்துங்கள். ஸ்கூல், காலேஜ் விட்டுப் பிள்ளைகள் நேராக வீட்டுக்கு வரும்போது இந்த பணியாரத்தை சுடசுட தட்டில் போட்டுக் கொடுத்தால் அடுத்தமுறை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். உடலுக்கு நல்லதும் கூட.
சாஃப்டான பஞ்சு போன்ற குழிப்பணியாரத்துக்கு எப்போதுமே மாவை சரியான பக்குவத்தில் அரைத்து அதை புளிக்க வைக்க வேண்டும். இப்படி செய்தால் தான் ருசியான பணியாரம் கிடைக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் 10 நிமிடத்தில் கடலை மாவு இல்லாமலே செய்யலாம் - மொறு மொறு மசாலா வேர்க்கடலை
இந்த பதிவும் உதவலாம்: உங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்க வேண்டிய பீட்ரூட் பூரி, பீட்ரூட் பக்கோடா மற்றும் பீட்ரூட் சூப்
இந்த பதிவும் உதவலாம்: கோவில் பிரசாத சுவையில் காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]