herzindagi
masala peanut big

வெறும் 10 நிமிடத்தில் கடலை மாவு இல்லாமலே செய்யலாம் - மொறு மொறு மசாலா வேர்க்கடலை

இந்த பதிவின் மூலமாக கடலை மாவு இல்லாமலே, மொறுமொறுவென மசாலா வேர்க்கடலை செய்வது எப்படி என படித்தறிவோம் வாருங்கள்.
Editorial
Updated:- 2022-11-26, 06:00 IST

இந்த சீசனில் மாலை நேரத்தில் சூடான டீயுடன் மொறு மொறு ஸ்நாக்ஸ் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். மாலையில் தேநீர் அருந்தும் பழக்கம் எல்லோருக்கும் இருந்தாலும், பெரும்பாலான பெண்களுக்கு ஏதேனும் நொறுக்கு தீனி சாப்பிடவேண்டும் என்னும் எண்ணம் தோன்றும். அத்தகைய சூழ்நிலையில், பெண்கள் தினமும் என்ன செய்ய வேண்டும் என்றும் யோசிக்க செய்வர்.

நீங்களும் அவர்களுள் ஒருவரா? டீயுடன் காரமாக ஏதாவது சாப்பிட வேண்டுமா? என்ன செய்வது என்றும் குழப்பமா? நிச்சயமாக இந்த மசாலா வேர்க்கடலை உங்களுக்கு சரியானதாக இருக்கும். ஆம், மசாலா வேர்க்கடலை செய்வது மிக எளிதானது மட்டுமல்ல, சாப்பிட சுவையானதும் கூட. கீழே குறிப்பிடப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றி எளிதாக செய்யலாம்.

எப்படி செய்வது

masala peanut

  • மசாலா கடலை செய்ய முதலில் வேர்க்கடலையை வாங்கவும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் அதனை போட்டு, தோலை நீக்கி தனியாக வைத்து விடவும்.
  • இப்போது ஒரு நான்-ஸ்டிக் கடாயில் 2 ஸ்பூன் நெய் விட்டு, நெய் சூடானதும், அதில் வேர்க்கடலையை சேர்க்கவும்.
  • பின் வேர்க்கடலையை 5 நிமிடங்களுக்கு குறைந்த சூட்டில் வைத்து லேசான பொன்னிறம் வரும் வரை வறுக்கவும். வேர்க்கடலையை கிண்டிக்கொண்டே இருக்கவும். இல்லையேல், கருகிவிடும்.
  • வேர்க்கடலை லேசாக நிறம் மாறியதும், ஒரு பாத்திரத்தில் எடுத்து, உப்பு, பட்டை மிளகாய், சாட் மசாலா போன்றவற்றைச் சேர்க்கவும்.
  • பின் நன்றாக கலந்து ஆற வைக்கவும். ஆறியதும் டீயுடன் சேர்த்து வாய்க்கு ருசியாக சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

masala peanut

  • வேர்க்கடலை - 2 கப்
  • நெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • பட்டை மிளகாய் - ½ டீஸ்பூன்
  • சாட் மசாலா - ½ டீஸ்பூன்
  • உப்பு - ½ டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: freepik

Herzindagi video

மசாலா வேர்க்கடலை ரெசிபி Recipe Card

மசாலா வேர்க்கடலை ரெசிபி செய்வதை இப்போது பார்ப்போம்

Vegetarian Recipe
Total Time: 10 min
Prep Time: 5 min
Cook Time: 5 min
Servings: 3
Level: Medium
Course: Snacks
Calories: 175
Cuisine: Indian
Author: Prabhanjani VS

Ingredients

  • -

Step

  1. Step 1:

    முதலில் ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை போட்டு, தோலை நீக்கி தனியாக வைத்து விடவும்.

  2. Step 2:

    இப்போது ஒரு நான்-ஸ்டிக் கடாயில் 2 ஸ்பூன் நெய் விட்டு, நெய் சூடானதும், அதில் வேர்க்கடலையை சேர்க்கவும்.

  3. Step 3:

    பின் வேர்க்கடலையை 5 நிமிடங்களுக்கு குறைந்த சூட்டில் வைத்து லேசான பொன்னிறம் வரும் வரை வறுக்கவும்.

  4. Step 4:

    வேர்க்கடலை லேசாக நிறம் மாறியதும், ஒரு பாத்திரத்தில் எடுத்து, உப்பு, பட்டை மிளகாய், சாட் மசாலா போன்றவற்றைச் சேர்க்கவும்.

  5. Step 5:

    பிறகு நன்றாக கலந்து ஆற வைக்கவும். ஆறியதும் டீயுடன் சேர்த்து வாய்க்கு ருசியாக சாப்பிடலாம்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]