herzindagi
kids recipe beet big

உங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்க வேண்டிய பீட்ரூட் பூரி, பீட்ரூட் பக்கோடா மற்றும் பீட்ரூட் சூப்

பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு உதவும் பீட்ரூட் பூரி, பக்கோடா சூப் - வீட்டில் செய்வது எப்படி என்பதை படித்தறிவோம் வாருங்கள்.
Editorial
Updated:- 2022-10-22, 11:53 IST

பிள்ளைகள் விதவிதமான உணவு கேட்டு அடம்பிடிப்பது வழக்கம் தான். எனவே, அவர்களுக்கு ஆரோக்கியமான பலவித ஊட்டச்சத்து நிறைந்த உணவினை நாம் தர வேண்டியது அவசியம். எந்த மாதிரியான ஆரோக்கியமான உணவை நாம் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். எனில், இந்த விதவிதமான பீட்ரூட் உணவை செய்து கொடுத்து அசத்துவதோடு, அவர்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாமே. பீட்ரூட்டில் பல வைட்டமின்கள் உள்ளது. அதனால் தான் இதனை எல்லோரும் ‘சூப்பர் ஃபுட்’ என்று அழைக்கின்றனர். ஆம், இதனில் வைட்டமின் B, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற பல உள்ளது. நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்கு எல்லா ஊட்டச்சத்துக்களுமே அவசியம் ஆகிறது. இன்றைய பதிவில், பீட்ரூட்டில் செய்யக்கூடிய பூரி, பக்கோடா மற்றும் சூப் பற்றி நாம் பார்க்கவிருக்கிறோம். இதனை நம்மால் எளிதில் செய்துவிட முடியும். மேலும், வீட்டில் உள்ள எல்லோருக்குமே இதன் சுவை நிச்சயம் பிடிக்கும்.

பீட்ரூட் பூரி

kids recipe beet

தேவையான பொருட்கள்

  • மாவு - 4 கப்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • நெய் - 4 டீஸ்பூன்
  • பீட்ரூட் - 1 கப் (துருவல்)
  • கரம் மசாலா - ½ டீஸ்பூன்
  • எண்ணெய் - தேவைக்கேற்ப
  • பெருங்காயம் - 1 சிட்டிகை
  • ஓமம் - ½ டீஸ்பூன்
  • பச்சை கொத்தமல்லி - 2 டீஸ்பூன்

செய்வது எப்படி?

  • முதலில், மாவையும், பீட்ரூட் துருவலையும் கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்துவிடவும்
  • 5 முதல் 7 நிமிடங்களுக்கு பிறகு, மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் (எண்ணெய் & நெய் தவிர) சேர்த்துக்கொள்ளவும். இதனோடு தேவையான அளவு தண்ணீரை சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும்
  • அதன்பிறகு, பிசைந்து வைத்திருக்கும் மாவில் நெய் சிறிது ஊற்றவும். இது பூரிக்கு சுவையையும், மொறுமொறுப்பையும் சேர்க்கும்
  • இந்த மாவை கொண்டு சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும். பிறகு இதனை பூரி போடுவதற்கு ஏற்றவாறு உருட்டி கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பிறகு பூரியை போட்டு எடுக்கவும்
  • இதனை குருமா அல்லது சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவை அவ்வளவு அருமையாக இருக்கும்

பீட்ரூட் பக்கோடா

kids recipe beet

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு - 100 கிராம்
  • பீட்ரூட் - 1 கப் (துருவல்)
  • பூண்டு பேஸ்ட் - ½ டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • பிரெட் தூள் - ½ கப்
  • மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்
  • கொத்தமல்லி இலை - 1 டீஸ்பூன்
  • பேக்கிங் சோடா - ½ டீஸ்பூன்
  • எண்ணெய் - தேவைக்கேற்ப
  • பெருங்காயம் - 1 சிட்டிகை
  • வெங்காயம் - 2 (நன்றாக நறுக்கியது)

செய்வது எப்படி?

  • முதலில், கடலைமாவையும், பீட்ரூட் துருவலையும் கலந்துக்கொள்ளவும்
  • பிறகு கொஞ்சமாக தண்ணீர், பிரெட் தூள் மற்றும் மற்ற அனைத்து பொருட்களையும் (பேக்கிங் சோடா, எண்ணெய் தவிர) கொண்டு கெட்டியாக மாவை தயாரித்து கொள்ளவும்
  • அதன்பிறகு, பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்துக்கொள்ளவும்
  • இப்போது, கடாயில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் சுட்டவுடன், கடாயில் ஒவ்வொரு பக்கோடாவாக போட்டு இருப்பக்கமும் புரட்டி எடுக்கவும். அப்போது தான் மொறுமொறுவென வரும்.
  • இதனை சட்னி உடன் சேர்த்து சாப்பிட சுவை அவ்வளவு அருமையாக இருக்கும்

பீட்ரூட் சூப்

kids recipe beet

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் - 2
  • உருளைக்கிழங்கு - 1
  • வெங்காயம் - 1
  • தயிர் - ⅓ கப்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • பச்சை காய்கறி - 1 கப்
  • கொத்தமல்லி இலை - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்வது எப்படி?

  • முதலில், காய்கறிகளை நன்றாக அலசி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  • அதன்பிறகு, அனைத்து காய்கறிகளையும் குக்கரில் போட்டு, தயிர் சேர்த்து வேகவிடவும்
  • அது நன்றாக வெந்ததும், ஆறவிட்டு, மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்
  • பிறகு பிளேட்டிற்கு மாற்றிக்கொண்டு, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடலாம்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: freepik and shutterstock

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]