herzindagi
how to do kanchipuram idli home recipe

கோவில் பிரசாத சுவையில் காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரசாதமான காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை படித்தறிந்து பயன்பெறலாம்.
Editorial
Updated:- 2022-12-10, 09:00 IST

காஞ்சிபுரம் மாவட்டம் கோயில் ஸ்தலங்களுக்கு எப்படி பிரசித்தி பெற்றதோ அதே போல் காஞ்சிபுரம் இட்லியும் உலகம் முழுவதும் அறியப்படும் உணவாக இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படும் காஞ்சிபுரம் இட்லி மிளகும் நெய்யும் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

அதே போல் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தோசை வடை மற்றும் காஞ்சிபுரம் இட்லியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கிட்டதட்ட பல ஆண்டுகளாக இட்லியை மூங்கில் குடலையில் மந்தாரை இலையை வைத்து வேக வைக்கிறார்கள். மந்தாரை இலை கிடைக்காத காலத்தில் வாழை இலையும் பயன்படுத்தப்படுகிறது. காஞ்சிபுரத்தில் இருக்கும் எல்லா ஹோட்டல்களிலும் காஞ்சிபுரம் இட்லி கிடைக்கும்.

இதன் சுவைக்கு எதுவும் ஈடாகாது என்பது காஞ்சிபுரம் இட்லியை உண்டவர்களுக்கு மட்டுமே தெரியும். இதை ருசித்துப் பார்க்க நீங்கள் காஞ்சிபுரம் வரை போக வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே பாரம்பரியமான காஞ்சிபுரம் இட்லி செய்யலாம். மசாலா இட்லி போல் இருக்கும் இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்முறையை விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

kanchipuram idli

  • பச்சரிசி – 1 கப்
  • புழுங்கல் அரிசி – 1 கப்
  • உளுந்து – 1 கப்
  • வெந்தயம் – ½ டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • சுக்கு பொடி – 1 டீஸ்பூன்
  • முந்திரி – 10
  • பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • கடுகு- 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  • நெய் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

இந்த பதிவும் உதவலாம்: ஹோட்டல் ஸ்பெஷல் ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் - வீட்டிலேயே செய்வது எப்படி?

மாவு தயாரிக்கும் முறை

  • காஞ்சிபுரம் இட்லிக்கு மாவை பக்குவமாய் அரைப்பது தான் மிக மிக முக்கியம். முதல் நாள் இரவு அரிசியை ஊற போட்டு, காலையில் எடுத்து அரைத்தால் மாவு சரியான பக்குவத்தில் வரும்.
  • பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அதை மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டுக் கொறகொறப்பாக அரைக்கவும். நார்மல் இட்லிக்கு அரைப்பது போல் நைஸாக அரைக்கக் கூடாது. காஞ்சிபுரம் இட்லிக்கு மாவை எப்போதுமே கொற கொறப்பாகத் தான் அரைக்க வேண்டும். பின்பு மாவை சில மணி நேரம் வைத்து புளிக்க விடவும்.

காஞ்சிபுரம் இட்லி செய்முறை

kanchipuram idli recipe

  • முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, முந்திரி சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பின்பு அதில் உளுத்தம் பருப்பு, சுக்கு பொடி, சீரகம், மிளகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.
  • இப்போது தாளித்த பொருட்களை அரைத்து புளிக்க வைத்துள்ள மாவில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு போட்டு மாவை நன்கு கலந்து கொள்ளவும்.
  • இதை வழக்கம் போல் இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வேற லெவல் டேஸ்டில் திருநெல்வேலி அல்வா! ஒருமுறை வீட்டில் செய்து பாருங்கள்!

  • ஒரிஜினல் காஞ்சிபுரம் இட்லி போலவே சாப்பிட, வாழை இலையை கட்டமாக வெட்டி அதை நெருப்பில் லேசாக வாட்டி எடுக்க வேண்டும்.
  • பின்பு அந்த இலையை டம்ளரில் வைத்து, அதன் உள்ளே இட்லி மாவை ஊற்றி இட்லி குக்கரில் வேக வைத்து எடுத்தால் சூப்பரான பாரம்பரிய காஞ்சிபுரம் இட்லி தயார்.
  • காலை உணவை வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் உங்கள் வீட்டில் இந்த காஞ்சிபுரம் இட்லியை செய்து பாருங்கள். பிறகு அடிக்கடி செய்வது உறுதி.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: Google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]