திருநெல்வேலி அல்வா என்றாலே நாக்கில் எச்சில் ஊறும். சுவை, மணம் மாறாமல் அதே சுவையில் அல்வா செய்யக் கற்றுக்கொள்வோமா?
தமிழகத்தில் அல்வாவுக்கு பெயர் போன திருநெல்வேலியிலிருந்து தினமும் டன் கணக்கில் அல்வா வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி ஆகி கொண்டிருக்கிறது. திருநெல்வேலியில் இருக்கும் இருட்டு கடை அல்வா, சாந்தி கடை அல்வா போன்ற கடைகளில் கூட்டம் அலைமோதும். அதிலும் இருட்டு கடை அல்வா மாலை நேரங்களில் மட்டுமே விற்கப்படும். மந்தார இலையில், நெய் ததும்ப சுட சுட அல்வா சாப்பிட, கடைத் திறப்பதற்கு முன்பே வரிசையில் காத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு இருட்டு கடை அல்வா ருசிக்கு பெயர் போனது.
கோதுமையில் செய்யப்படும் இந்த அல்வாவின் அசாத்திய ருசிக்கு தாமிரபரணி தண்ணீரும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் சரி இப்போது திருநெல்வேலி அல்வா சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்திருக்கும். கவலை வேண்டாம் ! இந்த செய்முறையைப் பின்பற்றினாலே போதும், வீட்டிலேயே சூப்பரான திருநெல்வேலி அல்வா செய்து அசத்திடலாம். இதன் செய்முறையைப் பார்க்கலாம் வாருங்கள்.
பாரம்பரிய முறைப்படி, திருநெல்வேலியில் முதல் நாள் இரவே கோதுமையை ஊற வைத்து மறுநாள் காலையில் அதை அரைத்துப் பால் எடுத்து அல்வா செய்வார்கள். இதற்கு சிறிது நேரம் எடுக்கும் என்பதால் அதே சுவையில் கோதுமை மாவை வைத்துத் திருநெல்வேலி அல்வா எப்படி செய்யலாம் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்ல போகிறோம்.
திருநெல்வேலி அல்வா செய்முறையில் சர்க்கரை பாகு தயார் செய்வது மிக மிக முக்கியம். அல்வாவுக்கு நிறத்தைக் கொடுப்பதே சர்க்கரை பாகு தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
நீங்களும் கண்டிப்பாக விடுமுறை நாட்களில் திருநெல்வேலி அல்வாவை வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கும் கொடுத்து மகிழுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]