பொங்கல் சாப்பிட்டதும் தூக்கம் சொக்கிட்டு வருதா ? இது தான் காரணம்

சுட சுட வெண் பொங்கல் சாப்பிடுவதற்கு எல்லோருக்குமே பிடிக்கும். பொங்கல் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரத்திலேயே தூக்கம் தானாக வரும். பொங்கல் சாப்பிட்டடவுன் தூக்கம் வருவதற்கு பலரும் நெய் பயன்பாட்டை குறிப்பிடுகின்றனர். அது மட்டுமல்ல வேறு சில காரணங்களும் இருக்கின்றன.
image

காலையில் வெண் பொங்கல், நெய் பொங்கல் சாப்பிட்டு விட்டு பள்ளி, கல்லூரி, அலுவலகம் எங்கு சென்றாலும் கண்களை இருட்டிக் கொண்டு தூக்கம் வரும். தூக்கத்தை கட்டுப்படுத்த என்ன செய்தாலும் பயனளிக்காது. சில ஆசிரியர்கள் நாம் பொங்கல் சாப்பிட்டத்தை கண்டுபிடித்துவிடுவார்கள். சில ஆசிரியர்கள் காலையிலயே தூங்குகிறாய் என திட்டுவது உண்டு. அடுத்தமுறை பொங்கல் சாப்பிடும் போது ஆசிரியரிடம் திட்டு வாங்கியதை அம்மாவிடம் கூறுவோம். பொங்கலில் நெய் அதிகம் பயன்படுத்துவதால் தூங்குவதாக நினைத்து கொண்டிருக்கிறோம். பொங்கல் சாப்பிட்டால் தூக்கம் வருவதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

why pongal makes you sleepy

பொங்கல் சாப்பிட்டால் தூக்கம் வருவது ஏன் ?

பொங்கல் சாப்பிட்டவுன் தூக்கம் வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. பச்சரிசி, பாசிப்பருப்பு, முந்திரி, நெய், மிளகு போட்டு பொங்கல் செய்கிறோம். கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசியை தண்ணீரில் கொதிக்க விட்டு உடனடியாக சப்பிடும் போது உடலில் செரிமானம் சீக்கிரமாக ஆரம்பிக்கும். இதன் மாச்சத்து உடலில் இன்சுலின் அளவினை அதிகரிக்கும். நாம் சுறுசுறுப்பாக இருப்பதற்கு உடலில் ஓரெக்சின் ஹார்மோன் காரணமாகும். உடலில் இன்சுலின் அளவுகள் அதிகரிக்கும் போது ஓரெக்சின் அளவுகள் குறைந்துவிடும். இதனால் நாம் சோர்வாக காணப்படுகிறோம்.

உடலில் இன்சுலின் அதிகரிக்கும் போது ஐப்போதலாமசில் இருந்தி ஒரு ஹார்மோன் சுரந்து நம்மை தூங்க வைக்கும். பாசிப்பருப்பு, முந்திரி, நெய் ஆகியவற்றில் டிரிப்டோபான் எனும் அமினோ அமிலம் உள்ளது. டிரிப்டோபானை கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கும் அரிசியுடன் சேர்த்து சமைத்து சாப்பிடும் போது உடலில் டிரிப்டோபான் அதிகளவில் உறிஞ்சப்படும். டிரிப்டோபான் உடலில் செரோடோனின், மெலட்டோனின் உற்பத்திக்கு உதவும். மெலட்டோனின் தூக்கத்துடன் தொடர்புடையது. இதன் காரணமாக பொங்கல் சாப்பிட்டவுன் நமக்கு தூக்கம் வருகிறது.

இரண்டாவது காரணம் : பொங்கல் சமைக்க நெய், அரிசி, பருப்பு, மிளகு ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். ஒரு கப் அல்லது 200 கிராம் பொங்கலில் 319 கலோரிகள் உள்ளன. இதில் 54 கிராம் கார்போஹைட்ரேட்ஸ், 8 கிராம் கொழுப்பு மற்றும் இதர கொழுப்பு 8 கிராம், நார்ச்சத்து 4 கிராம், புரதம் 7 கிராம் அடக்கம். இதோடு தேங்காய் சட்னி அல்லது சாம்பார் ஊற்றி சபபிடுகிறோம். பொங்கலை நாம் எப்போதும் குறைவாக சாப்பிடுவதில்லை. ஒரு கரண்டி சாப்பிட்டாலும் அதிகமாகவே தெரியும். வயிற்றில் பொங்கல் செரிமானம் ஆவதற்கு உடலில் உள்ள அதிகப்படியான ஆற்றல் தேவைப்படும். அதன் காரணமாகவும் தூக்கம் வருகிறது.

மேலும் படிங்கஉங்களை எலி கடித்தால் என்ன செய்யணும் தெரியுமா ? எலி கடி காய்ச்சல் உயிருக்கு ஆபத்தா ?

பொங்கல் மட்டுமல்ல எந்த உணவினையும் வயிறு நிறைய சாப்பிட்டால் உண்ட மயக்கம் ஏற்படும். வயிற்றின் அளவில் 75 விழுக்காடு மட்டுமே சாப்பிட்டு காலையில் தூக்கத்தை தவிர்த்திடுங்கள். ஆசிரியர்களிடம் திட்டு வாங்க மாட்டீர்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP