
குழந்தைகள் மட்டுமல்ல அலுவலகத்திற்குச் செல்லக்கூடிய அனைவருக்குமே பண்டிகை நாட்கள் எப்போது வருகிறது? எத்தனை நாட்கள் நமக்கு விடுமுறை கிடைக்கும் என்ற தேடல் அதிகளவில் இருக்கும். அதற்கேற்றார் போல் தான் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை விடப்படும் என முன்கூட்டியே அறிவிக்கும். அதன்படி வருகின்ற 2026 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவுப்படி, மாநில அரசின் உள்துறை சார்பில் முதன்மைச் செயலர் முருகானந்தம் கையெழுத்திட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் படிக்க: கோடை விடுமுறைக்கு வட இந்தியா டூர் ப்ளான் இருக்கா? மறக்காமல் இங்க விசிட் பண்ணிடுங்க!
இதன் படி எத்தனை நாட்கள் விடுமுறை? என்னென்ன தினங்களில் பண்டிகை நாட்கள் வருகிறது? என்பது குறித்த தகவல்களை இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையின் படி, தீபாவளி, பொங்கல், சரஸ்வதி பூஜை என மொத்தம் 24 நாட்கள் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத்துறைகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை தினம் பொருந்தும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில விடுமுறைகள் மட்டும் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கே தனிப்பட்டவையாக பொருந்தும் எனவும் தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Holiday healthy tips: விடுமுறைக் காலத்தில் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?
அரசு விடுமுறை குறித்த விபரங்கள்.
| வ.எண் | பண்டிகை நாட்கள்/ விடுமுறை நாட்கள் | தேதி | கிழமைகள் |
| 1 | ஆங்கில புத்தாண்டு | 1-1-2026 | வியாழன் |
| 2 | தைப் பொங்கல் | 15-1-2026 | வியாழன் |
| 3 | திருவள்ளுவர் தினம் | 16-01-2026 | வெள்ளி |
| 4 | உழவர் திருநாள் | 17-01-2026 | சனி |
| 5 | குடியரசு தினம் | 26-01-2026 | திங்கள் |
| 6 | தைப்பூசம் | 01-02-2026 | ஞாயிறு |
| 7 | தெலுங்கு வருட பிறப்பு | 19-03-2026 | வியாழன் |
| 8 | ரம்ஜான் | 21-03-2026 | சனிக்கிழமை |
| 9 | மகாவீர் ஜெயந்தி | 31-03-2026 | செவ்வாய் |
| 10 | ஆண்டு வருட கணக்கு | 01-04-2026 | புதன் |
| 11 | புனித வெள்ளி | 03-04-2026 | வெள்ளி |
| 12 | தமிழ் புத்தாண்டு/ அம்பேத்கார் பிறந்த நாள் | 14-04-2026 | செவ்வாய் |
| 13 | மே தினம் | 01-05-2026 | வெள்ளி |
| 14 | பக்ரீத் | 28-05-2026 | வியாழன் |
| 15 | முகரம் பண்டிகை | 26-06-2026 | வெள்ளி |
| 16 | சுதந்திர தினம் | 15-08-2026 | சனி |
| 17 | மிலாது நபி | 26-08-2026 | வெள்ளி |
| 18 | கிருஷ்ண ஜெயந்தி | 04-09-2026 | வெள்ளி |
| 19 | விநாயகர் சதுர்த்தி | 14-09-2026 | திங்கள் |
| 20 | காந்தி ஜெயந்தி | 02-10-2026 | வெள்ளி |
| 21 | ஆயுத பூஜை | 19-10-2026 | திங்கள் |
| 22 | விஜய தசமி | 20-10-2026 | செவ்வாய் |
| 23 | தீபாவளி | 08-11-2026 | ஞாயிறு |
பொதுவிடுறையின் 24 வது நாளாக டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அப்புறம் என்ன? இதற்கார்போல் உங்களது சுற்றுலா திட்டத்தை வகுத்துக் கொண்டு இந்த விடுமுறை நாட்களை மிகவும் சந்தோஷமாக்க முயற்சி செய்யுங்கள்.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]