எலி கடித்தால் உயிருக்கே ஆபத்தா ? முதற்கட்டமாக என்ன என்ன செய்யணும் தெரியுமா

எலி நம்மை கடித்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ? நோயினால் பாதிக்கப்பட்ட எலி நம்மை கடித்தாலோ கீறினாலோ பாக்டீரியாவின் வகையை பொறுத்து நமக்கு எலி கடி காய்ச்சல் வரும். தலைவலி, தோல் அரிப்பு, காய்ச்சலில் ஆரம்பித்து தசை வலி, மூட்டு வலி வரை அதன் தாக்கம் இருக்கும்.
image

வீட்டில் பதுங்கி கிடக்கும் எலிகள் உணவுகளை இரகசியமாக தின்று வீணாக்குவதோடு நம் உடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வீட்டில் ஆங்காங்கே எலி ஓடினால் அன்றாட வேலையை செய்வதில் சிரமம் இருக்கும். எலி கழிக்கும் சிறுநீரில் உள்ள கிருமிகள் நம் உடலுக்கு கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும். எலி நம்மை கடித்தாலோ கீறினாலோ அதற்கு சிகிச்சை எடுப்பது அவசியம். எலி கடி காய்ச்சலை அலட்சியமாக கருதி உயிரைவிட்டவர்களும் இருக்கின்றனர். எலி கடிக்கும் போது அதன் எச்சிலில் இருக்கும் பாக்டீரியா போன்ற கிருமிகள் நமக்கு தீங்கு விளைவிக்கும்.

rat bite fever symptoms

எலி கடி காய்ச்சல் என்றால் என்ன ?

எலி கடி காய்ச்சல் என்பது ஒரு அறிய பாக்டீரியா தாக்குதலாகும். எலிகள் நம்மை கடிக்கும் போது இந்த நோய் நமக்கும் பரவும். நோய் பாதிக்கப்பட்ட எலிகள் நம்மை கீறினாலும் எலி கடி காய்ச்சலால் பாதிக்கப்படுவோம். அவற்றின் எச்சில் உடலில் பட்டாலும் பாதிப்புக்கு வாய்ப்புண்டு. சில சமயங்களில் எலி கடி காய்ச்சல் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும். எனவே நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

இரண்டு வகையான எளி கடி காய்ச்சல் உள்ளன. எலியின் வாயிலும் அவற்றின் சுவாசக் குழாயின் மேல் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியா இருக்கும். அணில், அரிதினும் அரிதாக நாய், பூனை, பன்றி ஆகியவற்றின் மூலமாகவும் நமக்கு எலி கடி காய்ச்சல் பரவலாம்.

எலி கடி காய்ச்சலின் தீவிரம்

எலி கடி காய்ச்சல் அரிதானது. அமெரிக்காவில் வருடத்திற்கு 20 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் பேர் எலி கடிக்கு ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் 10 விழுக்காடு பேர் எலி கடி காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். ஆசியாவிலும் இதே நிலை தான். எலி கடி காய்ச்சலுக்கு பலரும் சிகிச்சை எடுக்க தவறுவதால் இந்த எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம்.

எலி கடி காய்ச்சலின் அறிகுறிகள்

ஸ்ட்ரெப்டோபாசில்லரி எலி கடி காய்ச்சல்

  • தலைவலி
  • காய்ச்சல்
  • வாந்தி
  • தோல் அரிப்பு
  • மூட்டு வலி
  • தசை வலி

எலி உங்களை கடித்த 3 நாட்களில் இந்த அறிகுறிகள் தென்படும்.

ஸ்பைரிலரி கடி காய்ச்சல்

  • விட்டு விட்டு காய்ச்சல்
  • கடித்த இடத்தில் வீக்கம்
  • வீங்கிய நிணநீர்
  • தோல் அரிப்பு

எலி கடித்தத்தில் இருந்து 21 நாட்களில் இந்த அறிகுறிகள் தெரியும்.

மேலும் படிங்கபல் கூச்சத்தை போக்குவதற்கு எளிமையான வீட்டு வைத்தியம்; வலி உடனடியாக போய்விடும்

எலி கடி காய்ச்சல் பரவல்

  • எலிகளால் மட்டுமல்ல எலி கடித்து பாதிப்பில் இருக்கும் நாய், பூனை போன்ற விலங்குகளுடன் நீங்கள் தொடர்பில் இருந்தாலும் எலி கடி காய்ச்சல் பரவும்.
  • வீட்டில் அதிகமான எலி நடமாட்டம்
  • எலி சிறுநீர் கழித்த தண்ணீரை குடிப்பது
  • நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் எலி கடி காய்ச்சலால் பாதிக்கபடலாம்.
  • மூளை, இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றில் எலி கடி காய்ச்சலின் தாக்கம் இருக்கும்.

எலி கடி காய்ச்சலுக்கு மருத்துவ தீர்வு உண்டு. நீங்கள் மருத்துவரை அணுகி ஆன்டிபயாடிக் ஊசி போட்டால் போதுமானது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP