பல் கூச்சத்தை போக்குவதற்கு எளிமையான வீட்டு வைத்தியம்; வலி உடனடியாக போய்விடும்

நீங்கள் பல் கூச்சத்தால் அவதிப்படுகிறீர்களா ? எதை சாப்பிட்டாலும் பல் கூசுகிறதா ? வலிக்கிறதா ? பல் கூச்சத்தால் இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுகிறீர்களா ? இதற்கான வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பல் கூச்சத்திற்கு வைட்டமின் குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.
image

நமக்கு பிடித்தமான உணவுகளை சாப்பிடும் போது ஒன்று இரண்டு பற்கள், ஒரு புறம் உள்ள பற்களில் வலி ஏற்படலாம் அல்லது அசெளகரியமான உணர்திறன் உண்டாகலாம். இதை பல் கூச்சம் என்கின்றனர். பற்சிப்பி என்று சொல்லக்கூடிய எனாமல் சேதமடைதல், குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமான நேரம் பல் துலக்கினால் எனாமல் தேய்ந்து விடுவது, பல் துலக்கியை நீண்ட நாட்களாக மாற்றாமல் இருப்பது, அமிலத் தன்மை வாய்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, எதுக்களிப்பு வாயில் இருக்கும் எச்சிலுடன் கலப்பது, பற்கள் சேதம் உள்ளிட்ட காரணங்களால் பல் கூச்சல் ஏற்படும். பொதுவாக பல் துலக்கியை 30-45 நாளில் மாற்றிவிடுங்கள். சத்து குறைபாடு, பற்களின் பிடிப்பு தன்மை குறைந்தாலும் பல் கூச்சம் உண்டாகும்.

tooth pain home remedies

பல் கூச்சத்திற்கு வீட்டு வைத்தியம்

காலங் காலமாக நம்முடைய முன்னோர்கள் பல் துலக்குவதற்கு பற்பொடி பயன்படுத்தி வந்தனர். நாம் பற் பசைக்கு மாறிவிட்டோம். அப்போதெல்லாம் கறி எலும்புகளை கடித்து சாப்பிடுவர். இன்று கரும்பு கடிப்பதற்கே யோசிக்கிறோம். பழங்களை எப்போதும் கடித்து சாப்பிடுங்கள். நறுக்கி சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்கவும். அந்த காலத்து பற்பொடிகள் பற்களுக்கு மிகுந்த பயன் அளித்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • கடுக்காய் - பல் ஆடாமல் தவிர்க்கும்
  • கிராம்பு - பல் ஈடுக்குகளில் உள்ள கிருமிகளை வெளியேற்றும்
  • கரிசலாங்கண்ணி - பற் கரைகளை அகற்றும்

இதோடு கல் உப்பு சேர்த்து அரைத்து தயாரிக்கும் பொடியை பல் துலக்க பயன்படுத்துவார்கள்.

சூடாக டீ காபி குடிக்கும் போது, ஐஸ் கிரீம் சாப்பிடும் போது பல் கூச்சத்தை அதிகமாக உணர்வோம். பற்களின் வேர் மெல்லியதாக மாறினால், எனாமல் தேய்ந்து இரத்தம் வருவது, ஈறு வீக்கம் இவை அனைத்தும் பல் பிரச்னைகளுடன் தொடர்புடையவை.

பல் கூச்சம் போக்கும் பற்பொடி

பற்பொடி செய்ய தேவையானவை

  • கல் உப்பு
  • கிராம்பு
  • கடுக்காய்
  • கரிசலாங்கண்ணி

கால் ஸ்பூன் கிராம்பு பொடி, கடுக்காய் பொடி ஒரு ஸ்பூன், வெயிலில் காய வைத்து அரைத்த கரிசலாங்கண்ணி பொடி இரண்டு ஸ்பூன், இடித்த கல் உப்பு இரண்டு சிட்டிகை சேர்த்து வைத்து பற்பொடி தயாரிக்கவும். இதை தொடர்ந்து உபயோகப்படுத்தினால் பல் கூச்சம் போய்விடும். ஆள்காட்டி விரலை கொண்டு பல் தேய்க்கவும்.

மேலும் படிங்கவியர்த்து கொண்டே இருந்தால் தடுப்பதற்கு நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் இவையே

பல் கூச்சத்திற்கு வீட்டு வைத்தியம்

  • நல்லெண்ணெய்யை இரண்டு ஸ்பூன் வாயில் ஊற்றி 5-7 நிமிடங்களுக்கு நன்கு கொப்பளித்து துப்பினால் ஈறுகள் தொடர்பான பிரச்னை சரியாகும்.
  • பல் வலி இருக்கும் இடத்தில் 2-3 கிராம்பு கடித்து 10 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள். 3-4 நாட்களுக்கு இதை தொடரவும்.
  • வெதுவெதுப்பான தண்ணீரில் கல் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும்.
  • கொய்யா இலைகளை மென்று சாப்பிட்டால் ஈறுகளின் வீக்கம் குறையும்.
  • 3 பல் பூண்டை கொஞ்சம் உப்பு சேர்த்து பற்களால் கடித்து பல் துலக்கி பாருங்கள் பல் தொடர்பான எந்த பிரச்னையும் ஏற்படாது.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP