வெயில் காலம், உடற்பயிற்சி செய்யும் போது, அதீத மன அழுத்தம், காரசாரமான உணவுகளை சாப்பிட்ட பிறகு நம் உடலில் இருந்து வியர்வை வெளிவருவது இயல்பானது. தோலுக்கு அடியில் உள்ள டெர்மிஸ் லேயரில் இருந்து வியர்வை உற்பத்தியாகிறது. தலை, அக்குள், உள்ளங்கை, கால் பாதத்தில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும். வியர்வையானது தண்ணீரும், உப்பும் கலந்தது. உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்க வியர்வை வெளியேற்றப்படுகிறது. அதிகப்படியான வியர்வை வெளியேற்றம் மருத்துவ காரணங்களுடன் தொடர்புடையது. ஏன் ? எதனால் ? வியர்க்கிறது எனத் தெரியாது. சிறுவர் முதல் பெரியவர் வரை வியர்வை பிரச்னை இருக்கலாம்.
வியர்வை காரணம்
வரைபடத்தில் காண்பது போல் உடலில் செரிமான செயல்பாடு மிகவும் எளிதல்ல. நாம் சாப்பிட்ட உணவுகளை அரைத்து அதிலுள்ள ஊட்டச்சத்துகளை பெறுவதற்குள் உடல் வெப்பம் அடைந்துவிடும். காரசாரமான உணவுகளை சாப்பிட்டு கொண்டே இருந்தால் உடலின் வெப்பம் குறையவே குறையாது. உடல் பருமன், மாதவிடாய் காலத்தில் ஹார்மோன் மாற்றம், சர்க்கரை நோய், உட்கொள்ளும் மருந்துகளும் வியர்வைக்கான காரணங்களாக அமையலாம்.
வியர்வையை குறைக்கும் உணவுகள்
தண்ணீர்
வியர்வை வெளியேற்றத்தை குறைக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் வெப்பத்தை குறைவாக வைத்திருந்தால் வியர்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. அதிகப்படியான வியர்வை வெளியேற்றம் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். ஆண்கள் தினசரி 3.5 லிட்டர் தண்ணீரும், பெண்கள் தினசரி 2.8 லிட்டர் தண்ணீரும் குடிப்பது நல்லது.
நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள்
ஆப்பிள், திராட்சை, தர்பூசணி, ஆரஞ்சு, அண்ணாசி பழம் போன்ற பழங்களும், கத்திரிக்காய், குடை மிளகாய், கீரை, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளையும் சாப்பிட்டு உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். டீ, காபி குடித்தால் தண்ணீர் குடிப்பதை குறைத்துவிடக் கூடாது. அதை ஈடு கட்டவே நீர்ச்சத்து நிறைந்த படங்கள்.
கால்சியம் நிறைந்த உணவுகள்
கால்சியம் சத்து உடல் வெப்பத்தை சீராக வைத்து வியர்வை வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. தினமும் போதுமான அளவு கால்சியம் உட்கொள்வதை உறுதி செய்ய கொழுப்பு குறைந்த பால், பாலாடைக்கட்டி, முட்டை சாப்பிடவும்.
மேலும் படிங்கரொம்ப மூச்சு வாங்குதா ? வாக்கிங் செல்லும் போது இப்படி நடந்தால் கவலைக்குரிய விஷயமா?
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நார்ச்சத்து கிடையாது. எனினும் அவற்றில் பொட்டாசியம் அதிகம். வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம், வைட்டமின் பி6 மற்றும் இதர ஊட்டச்சத்துகள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை நம்முடைய உடல் ஜீரணிப்பது கடினம். செரிமானத்தின் போது உடல் வெப்பம் கடுமையாக அதிகரித்து வியர்வை வெளிவரும். இதற்கு மாற்றாக நார்ச்சத்து நிறைந்த கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடவும். சாதத்தை குறைத்து முழு தானியம் சாப்பிடவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation