உடலின் சரியான செயல்பாட்டிற்கு ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு, ஹார்மோன்கள் சமநிலையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், பரபரப்பான மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அல்லது தவறான உணவுப் பழக்கம் காரணமாக, ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனை பொதுவான பிரச்சனையாகிவிட்டது. ஹார்மோன் சமநிலையின்மைக்கான அறிகுறிகள் உடலில் வெளிப்படையாக தெரிந்து விடும், இதன் காரணமாக பல வகையான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஹார்மோன்களை சமநிலையில் வைக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
ஆனால் இதற்கு முதலில், நம் உடலில் எந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். சரியான காரணத்தை அறிந்து கொண்டால் மட்டுமே, ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும் காரணங்களிலிருந்து நம்மால் விலகி இருக்க முடியும். இது குறித்த தகவலை உணவியல் நிபுணர் ராதிகா கோயல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உடலில் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு எந்தெந்த காரணங்களுக்காக நிகழ்கிறது மற்றும் அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.
இதுவும் உதவலாம்:ரெயின்போ டயட் உடலுக்கு இவ்வளவு நல்லதா!
காபியை அதிகமாக உட்கொள்வதால், ஹார்மோன்களும் பாதிக்கப்படுகின்றன. அதிகமாக காபி குடிப்பது தூக்கத்தை ஏற்படுத்தும். காபியில் காஃபின் காணப்படுகிறது. இதன் காரணமாக, மன அழுத்த ஹார்மோன்கள் உடலில் அதிகரிக்கும்.
உங்கள் உணவில் சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால், அது உடலில் ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். இது PMS, PCOD, மாதவிடாய் மற்றும் மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளை மேலும் அதிகரிக்கிறது. சர்க்கரையை அதிகப்படியாக உட்கொண்டால், அது இன்சுலின் ஹார்மோனை பாதிக்கிறது, பின்னர் அது ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் சமநிலையையும் பாதிக்கிறது.
பால் மற்றும் பசை பொருட்கள் காரணமாகவும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். ரொட்டி மற்றும் சர்க்கரை உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது, இது உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பல சமயங்களில் மக்களால் பால் ஜீரணிக்க முடியாமல் போய் விடும், இது குடல் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
மன அழுத்தம் நம் முழு உடலையும் பாதிக்கிறது. ஆனால் பெரும்பாலும் நாம் அதை அலட்சியம் செய்கிறோம். மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரிப்பால் நமக்கு கவலை, எடை அதிகரிப்பு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, மன அழுத்தம் மற்றும் பல பிரச்சனைகளை ஏற்படும். எனவே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மன அழுத்தத்தை சந்திக்கும் போதெல்லாம், உங்கள் உடலில் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.
இதுவும் உதவலாம்:இரத்த சோகை முதல் சர்க்கரை நோய் வரை பல நோய்களுக்கு தீர்வு தரும் கறிவேப்பிலை
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் போதுமான தூக்கம் மிகவும் அவசியம். தூக்கமின்மையால், மன அழுத்த ஹார்மோன்கள் உடலில் அதிகரிக்கத் தொடங்குகின்றன. இது வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கிறது மற்றும் இன்சுலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]