உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க தினசரி அடிப்படையில் குறிப்பிட்ட அளவு மைக்ரோ மற்றும் மேக்ரோ நுண்ணூட்ட சத்துக்கள் தேவைப்படுகிறது. இதற்கு ஆரோக்கியமான உணவுமுறை அவசியம் ஆகிறது. ஆரோக்கியமான உணவில் பல வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. ஆரோக்கியமாக இருக்க, மக்கள் கீட்டோ உணவு, பேலியோ உணவு போன்ற பல வகையான உணவு முறைகளை பின்பற்றுகிறார்கள். ரெயின்போ உணவும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ரெயின்போ உணவு உங்களை ஆரோக்கியமாகவும், பல நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. பியாண்ட் டைனிங் கம்பெனியின் நிறுவனர் செஃப் ராஜி அவர்கள் இதை பற்றி நம்மிடம் விளக்குகிறார்.
பழங்கால பழமொழி - 'உணவே மருந்து' என்பது மருந்துகளை உணவு வடிவில் உட்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல, மாறாக ஆரோக்கியமான, இயற்கையான மற்றும் பருவகாலத்தில் கிடைக்க கூடிய பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. இது நமது உடலுக்கு தேவையான மைக்ரோ மற்றும் மேக்ரோ நுண்ணூட்டங்களை உறிஞ்சி தக்கவைக்க உதவுகிறது.
இதுவும் உதவலாம்:பெண்களின் உடல் எடையை குறைக்க உதவும் உடற்பயிற்சிகள்
வெவ்வேறு வண்ண பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன.
வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளன, ஆனால் கலோரிகள் குறைவாக உள்ளன. இவை அனைத்தும் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அவை சாப்பிடும் ஆசையை குறைக்கின்றன மற்றும் உங்கள் பசியைக் கட்டுப்படுத்துகின்றன.
உடலில் சரியான அளவு நுண்ணூட்டச்சத்துக்கள் இருக்கும்போது, நோய் உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்கு உடல் அதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொள்கிறது. வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகளில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன, இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதன் மூலமும், உடல் எடையை கட்டுக்குள் வைப்பதன் மூலமும், வண்ணமயமான பழங்கள் இதய நோய், சிறுநீரக நோய், நீரிழிவு மற்றும் பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.
ஒரு கனமான உணவுக்குப் பிறகு ஒரு நபர் அடிக்கடி சோர்வாக உணர்கிறார். எனவே, மனநிலையை மேம்படுத்தவும், உடல் சக்தியின் அளவை அதிகரிக்கவும், பழங்களை சாப்பிடவும், குறிப்பாக பல்வேறு வகையான வண்ணமயமான பழங்களை சாப்பிடுங்கள்.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர்களை பராமரிக்க உதவுகிறது, இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியம் தேவையானது.
இதுவும் உதவலாம்:தலைவலி, அசிடிட்டி, வாயு இந்த மூன்று பிரச்சனைக்கும் ஒரே டீ போதும்!
வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. ரெயின்போ உணவைப் பின்பற்றுவது வயது முதிர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. சிவப்பு- இந்த நிறம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதாக கருதப்படுகிறது. எனவே, தக்காளி, சிவப்பு கேப்சிகம், ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆரஞ்சு - நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதற்கு கேரட், ஆரஞ்சு, இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் ஆப்ரிகாட்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மஞ்சள்- பார்வையை மேம்படுத்தவும் பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தடுக்கவும் பயன்படுகிறது. அன்னாசி, வாழைப்பழங்கள், மஞ்சள் மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சை ஆகியவை கரோட்டினாய்டுகளின் நல்ல ஆதாரங்கள், ஏனென்றால் அவை மஞ்சள் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகும்.
பச்சை - கீரை, ப்ரோக்கோலி, அவகேடோ, கிவி மற்றும் பிற பச்சை இலை காய்கறிகள் ஆகியவற்றில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதால், நமது பற்கள், எலும்புகள் மற்றும் நகங்களை வலுவாக வைத்திருக்கும்.
நீலம்/வயலட்- ப்ளூபெர்ரி, ஊதா திராட்சை, கத்திரிக்காய், ஊதா முட்டைக்கோஸ் போன்றவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
வெள்ளை- இந்த நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றன மற்றும் எலும்பு மற்றும் பற்களின் வலிமையைப் பராமரிக்க உதவுகின்றன. காலிஃபிளவர், வெங்காயம், பூண்டு மற்றும் காளான் ஆகியவை உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சில காய்கறிகள்.
சிறப்பான ஆரோக்கியத்தை விரும்பினால் ரெயின்போ உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]