பாலாசனம்
சருமம் மற்றும் உடலை இளமையாக வைத்திருக்க, மன அழுத்தம் இல்லாமல் இருக்க பாலாசனம் செய்யுங்கள். எல்லா வயதுடைய பெண்களும் இந்த ஆசனத்தைச் செய்யலாம், பாலாசனம் செய்வதும் மிக மிக சுலபம்.
பலாசனம் செய்யும் முறை
- உங்கள் முழங்கால்களை வளைத்து முட்டி போடுவது போல் உட்காரவும்.
- பின்பு கைகளை உடலின் முன்புறமாக நகர்த்தி, நெற்றி தரையில் தொடும் படி உடம்பை வளைக்கவும்.
- இப்படியே சிறிது நேரம் இருக்கவும். இது உடலில் இருக்கும் நரம்புகளுக்கு ஒருவித அழுத்தத்தை கொடுக்கிறது.
சேதுபந்தாசனம்
இடுப்பு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் எடையைக் குறைக்க இது உதவுகிறது. மேலும் உடலின் கீழ் பகுதியில் தசை நீட்சிக்கு இது வழிவகுக்கிறது, சேதுபந்தாசனம் முதுகுவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.
சேதுபந்தாசனம் செய்யும் முறை
- தரை அல்லது பாயில் முதுகால் படுக்கவும்.
- பின்பு, உங்கள் கைகளை உடலுடன் நேராக வைக்கவும்.
- இப்போது, மூச்சை உள்ளிழுத்து தொடையின் பின்புறம் மற்றும் இடுப்பு பகுதியின் தசைகளை மேலே தூக்கவும்.
- மேல் உடலின் எடையை தோள்பட்டையால் தாங்கி பிடித்து நேர்க்கோட்டில் அப்படியே பேலன்ஸ் செய்யவும்.
- இதே நிலையில் 2-3 வினாடிகள் இருக்கவும்.
- பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றி இயல்பு நிலைக்குத் திருப்பவும்.
விராபத்ராசனம்
இந்த ஆசனம் உடலை சீர்படுத்துகிறது. மேலும் உடல் அமைப்பையும் மேம்படுத்துகிறது. இதை தொடர்ந்து செய்து வந்தால் தொடையைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையும்.
விராபத்ராசனம் செய்யும் முறை
- இந்த ஆசனத்தை செய்ய, முதலில் நேராக நின்று கைகளை இணைக்கவும்
- இப்போது முழங்காலில் இருந்து ஒரு காலை மட்டும் வளைத்து, மற்றொரு காலை முதுக்கு பின்புறம் நேராக வைக்கவும்.
- பின்பு முதுகை நேராக நிறுத்தி கன்னத்தை மேலே உயர்த்தவும்
- இந்த ஆசனம் கண்களுக்கு நல்ல பலன்களை தந்து உடல் தோற்றத்தை மேம்படுத்துகிறது.
இந்த யோகாசனங்களைத் தவிர, சூரிய நமஸ்காரத்தின் ஒவ்வொரு போஸையும் தினமும் செய்யுங்கள். இது முழு உடலுக்கும் பயிற்சி அளிக்கிறது. மேலும், உணவில் எண்ணெய் மற்றும் இனிப்பு உணவுகளைக் குறைத்து, நிறைய தண்ணீர் குடிப்பதைப் பழக்கமாக்கி கொள்ளுங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation