herzindagi
herbal tea for gas

தலைவலி, அசிடிட்டி, வாயு இந்த மூன்று பிரச்சனைக்கும் ஒரே டீ போதும்!

தலைவலி அசிடிட்டி போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பவரா நீங்கள்? ஒரு முறை இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள டீயை முயற்சி செய்து பாருங்கள்...
Expert
Updated:- 2023-05-08, 09:42 IST

இன்றைய பதிவில் நாம் அன்றாடம் குடிக்கும் டீயிலிருந்து மாறுபட்டு ஒரு ஆரோக்கியமான டீயை பற்றி பார்க்க போகிறோம். இந்த டீ குடித்து உங்கள் நாளை தொடங்கலாம் அல்லது நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் விரும்பும் பொழுது இதை குடிக்கலாம். சிறப்புகள் வாய்ந்த இந்த டீ தலைவலி, அசிடிட்டி போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனைகளான தலைவலி மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு இந்த டீ நல்ல நிவாரணம் தரும்.

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த டீ பற்றிய தகவலை உணவியல் நிபுணரான ராதிகா கோயல் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். நிபுணரின் பதிவை இப்போது விரிவாக பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கோடையில் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தரும் சத்தான பழங்கள்

இந்த டீயை யாரெல்லாம் குடிக்கலாம்?

tea for headache

இந்த டீ ஒற்றைத் தலைவலி அசிடிட்டி மற்றும் வாயு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஏற்றது. பித்தம் அதிகமாக இருப்பவர்கள் அல்லது குடல் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த டீயை தினமும் குடிக்கலாம். வீட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு சில பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் இந்த டீ உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

நன்மைகள்

கொத்தமல்லி விதை அல்லது தனியாவில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட் பண்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், தலைவலியிலிருந்து நிவாரணம் பெறவும் உதவும்.

சோம்பு செரிமானத்தை மேம்படுத்தவும், சரும பளபளப்பை பராமரிக்கவும், எடையை குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

காலையில் ஏற்படும் குமட்டல் உணர்விற்கு கருவேப்பிலை நல்லது. இதனுடன் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்குவதன் மூலம் உடல் எடையை குறைக்கவும் உதவும்.

ஏலக்காய் குமட்டல், வாயு மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கும்.

டீ செய்முறை

herbal tea for head ache acidity gas

தேவையான பொருட்கள்

  • தண்ணீர் - 1 கப்
  • தனியா - 1 டீஸ்பூன்
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • ஏலக்காய் - 2(சிறியது)
  • கறிவேப்பிலை - கைப்பிடி அளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் நன்கு கொதிக்கும் பொழுது, சோம்பு ஏலக்காய் தனியா மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • ஒரு சில நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடவும்.
  • இதனை வடிகட்டி குடிக்கலாம். இந்த ஆரோக்கியமான டீ உங்கள் தலைவலி மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைக்கு நிவாரணம் தரும்.

இந்த பதிவும் உதவலாம்: இருமல் மற்றும் சளியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் மூலிகை கஷாயம்


இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]