herzindagi
cold cough home made kashayam

Cold Kashayam : இருமல் மற்றும் சளியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் மூலிகை கஷாயம்

அடிக்கடி இரும்பல் சளி தொந்தரவால் அவதிப்படுகிறீர்களா? நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த எளிமையான கசாயத்தை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்…
Expert
Updated:- 2023-05-05, 09:40 IST

மாறி வரும் பருவநிலை காரணமாக சளி மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது தான். இது போன்ற பல பிரச்சனைகளுக்கு நம் வீட்டு சமையல் அறையில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி சுலபமாக தீர்வு காணலாம்.

சளி, இருமல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியம் கை கொடுக்கும். இன்றளவும் பல பிரச்சனைகளுக்கு பாட்டி வைத்தியங்களே பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில் சளி மற்றும் இருமலுக்கான ஒரு கஷாயத்தை உணவியல் நிபுணரான ராதிகா கோயல் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சுலபமாக செய்யக்கூடிய இந்த கஷாயத்தில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. இதைப் பற்றி மேலும் அறிய பதிவை தொடர்ந்து படிக்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: ஓரே மாதத்தில் 6 கிலோ வரை எடை குறைக்க நிபுணரின் டயட் பிளான்

துளசி இஞ்சி கஷாயம்

herbal decotion for cold

  • துளசி இலைகள் - சிறிதளவு
  • இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  • கிராம்பு 2-3
  • பச்சை ஏலக்காய் 2-3
  • கருப்பு மிளகு 5-6
  • தண்ணீர் - 2 கப்

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்
  • மேற்கூறிய பொருட்கள் எல்லாவற்றையும் கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.
  • 7-8 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
  • கஷாயம் நன்கு கொதித்த பிறகு வடிகட்டி கொள்ளவும்.
  • நீங்கள் விரும்பினால் இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் இலவங்க பட்டை பொடி சேர்த்து சூடாக குடிக்கலாம்.

கஷாயத்தின் நன்மைகள்

  • சளி மற்றும் இருமலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • நெஞ்சு சளியை போக்கும்.
  • இந்த கஷாயம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் அனைத்து நச்சுகளையும் வெளியேற்ற உதவுகிறது.
  • செரிமானத்தை மேம்படுத்துகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • பல வகையான தொற்றுநோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

கஷாயத்தில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் மருத்துவ குணங்கள்

herbal kashyam for cold

  • துளசியின் மருத்துவ குணம் காரணமாக ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது. துளசியில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் உள்ளன.
  • சளி மற்றும் இருமலை விரட்டவும், தசை வலியை குணப்படுத்தவும், மன அழுத்தத்தை போக்கவும் துளசி பயனுள்ளதாக இருக்கும்.
  • இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் வயது முதிர்வை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இது வானிலை மாறும்போது ஏற்படும் சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் தருகிறது. மேலும் வயிறு மற்றும் சருமத்திற்கும் இஞ்சி மிகவும் நல்லது.
  • கிராம்பு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதில் உள்ள யூஜெனால் வாந்தி, வயிற்று பிரச்சனைகள், தலைவலியை நீக்க உதவுகிறது.
  • செரிமானத்தை மேம்படுத்தவும், வாந்தி குமட்டல், இருமல் போன்ற பிரச்சனைகளை போக்கவும் ஏலக்காய் உதவும்.
  • கருப்பு மிளகில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் சளி மற்றும் இருமலை சரி செய்ய உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: கோடையில் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தரும் சத்தான பழங்கள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]