Curry Leaf Benefits : இரத்த சோகை முதல் சர்க்கரை நோய் வரை பல நோய்களுக்கு தீர்வு தரும் கறிவேப்பிலை

மணம் நிறைந்த கறிவேப்பிலை தாளிப்புக்கு மட்டும் அல்ல, ஆரோக்கியத்திற்கு நல்லது. இதன் நன்மைகளை தெரிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்…

benefits of curry leaf for health

கறிவேப்பிலை செடியை சுலபமாக வீட்டிலேயே வளர்க்க முடியும். நல்ல செழிப்பாக வளரும் இந்த செடியை நீங்களும் வளர்த்து பயன் பெறுங்கள். தாளிக்கும் எண்ணெயில் கறிவேப்பிலை சேர்த்தவுடன், வீடெங்கிலும் அதன் வாசம் நிறைந்திருக்கும். சுவையை தவிர கறிவேப்பிலையில் ஏராளமான நன்மைகளும் நிறைந்துள்ளன. பல நோய்களை குணப்படுத்தவும், நோய்கள் அண்டாமல் உடலை பாதுகாக்கவும் கருவேப்பிலை சிறந்தது.

கறிவேப்பிலையில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் B1, வைட்டமின் B2, வைட்டமின் C போன்ற சத்துக்கள் உள்ளன. இதனுடன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சர்க்கரை நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இனி உணவில் உள்ள கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் அதை சாப்பிட முயற்சி செய்யுங்கள். கறிவேப்பிலையின் சில நன்மைகளை இப்பதிவில் படித்தறியலாம்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

curry leaf for anemia

  • கறிவேப்பிலை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற கூறுகள் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுகளை நீக்க உதவுகின்றன.
  • கறிவேப்பிலை குளிர்ச்சியான விளைவை கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் வயிறு குளிர்ச்சியாக இருப்பதோடு மட்டுமின்றி, செரிமானம் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளும் குணமாகும்.
  • கறிவேப்பிலை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்துகிறது. இதன் மூலம் இருதய நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்.
  • கறிவேப்பிலை இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
  • இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் கறிவேப்பிலையில் நிறைந்துள்ளன. ஆகையால் கறிவேப்பிலை இரத்த சோகைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • கறிவேப்பிலை சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கு நல்லது. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க, கண்டிப்பாக கறிவேப்பிலை சாப்பிடுங்கள். கறிவேப்பிலை சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பல நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாத்து, அவற்றின் செயல் திறனை மேம்படுத்தும்.
curry leaves benefits
  • முகப்பரு, வறட்சி, கரும்புள்ளிகள், மெல்லிய கோடுகள் போன்ற சரும பிரச்சனைகள் நீங்க கறிவேப்பிலை ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவவும். கறிவேப்பிலை ஃபேஸ் பேக் செய்ய, உலர்ந்த கறிவேப்பிலையை அரைத்து, அதில் ரோஸ் வாட்டர், முல்தானி மிட்டி, தேங்காய் எண்ணெய் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும். பின்னர் சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
  • கறிவேப்பிலையை அரைத்து தலை முடிக்கு தடவினால், முடி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இது முடி நரைத்தல், முடி உதிர்தல், பொடுகு, முடி வலுவிழத்தல் போன்ற பிரச்சனைகளை நீக்க உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: இருமல் மற்றும் சளியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் மூலிகை கஷாயம்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP