குதிரையின் உணவாக கருதப்படும் கொள்ளுவில் கால்சியம், புரதம், பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது பொதுவாக வறண்ட பகுதிகளில் வளர்க்கப்படும் தானியமாகும். இது ஏழைகளின் உணவு என்றும் அழைக்கப்படுகிறது. சேலம் மற்றும் தர்மபுரி பகுதிகளில் பெரும்பாலும் சாகுபடி செய்யப்படுகிறது. கொள்ளுவில் இருக்கும் ஊட்டச்சத்துகள், இன்றைய வாழ்க்கை முறையால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறைக்கு நிச்சயம் கொள்ளு உதவும்.
ஆயுர்வேதத்தின் முறைப்படி கொள்ளு துவர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் குணப்படுத்த பெயர் பெற்றது. இதை உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்கள் முதல் நீரிழிவு வரையிலான நோய்களிலிருந்து விடுபடலாம். அதேபோல் கொள்ளு பருப்பு அழகை அதிகரிக்கவும் பயன்படுத்த படுகிறது. கொள்ளுவில் இருக்கும் எண்ணற்ற நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க: இலுப்பை பூ சம்பா அரிசியை வடித்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாமல் ஆரோக்கியமாக வாழலாம்
வேகவைத்த கொள்ளு பருப்பை தொடர்ந்து உட்கொள்வதால் சிறுநீரக கற்களை அகற்ற உதவும். கொள்ளு சிறுநீரகத்தில் ஏற்படும் கால்சியம் ஆக்சலேட் கற்கள் உருவாவதைத் தடுக்கிறது. உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், உங்கள் உணவில் கொள்ளு பருப்பைச் சேர்த்துக் கொள்ளவும். இது ஒரு டையூரிடிக் ஆக செயல்படுகிறது.
கொள்ளு பருப்பில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளதால் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தபோக்கு இருக்கும்போது, பெண்களுக்கு பலவீனம் போன்ற பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. இதன் காரணமாக மாதவிடாய் சரியான நேரத்தில் வராமல், பிற உடல்நல பிரச்சினைகள் தொடங்குகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் பெற கொள்ளு மிகவும் உதவும்.
கொள்ளு பருப்பை தொடர்ந்து உட்கொண்டு வருவதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் கொள்ளு பருப்பை உட்கொள்ள அறிவுறுத்தப்படுவதற்கான காரணம் இதுதான்.
மேலும் படிக்க: தினமும் அன்னாசி பழம் சாப்பிடலாமா? உடலுக்கு என்ன ஆகும் தெரிஞ்சிக்கோங்க
எடை குறைக்க, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. கொள்ளு பருப்பில் குறைந்த கார்போஹைட்ரேட்டுகளும் அதிக அளவு புரதமும் நார்ச்சத்தும் உள்ளதால் எடையைக் குறைக்க உதவுகிறது.
கொள்ளு சாப்பிடுவதால் சளி, காய்ச்சல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களிலிருந்து நிவாரணம் பெற நன்மை பயக்கும். நெரிசல் அல்லது சுவாசப் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் பெற கொள்ளு சிறந்தது. இதை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கலாம்.
கொள்ளுவில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கல் அல்லது அமிலத்தன்மை பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.
அழகான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு சத்தான உணவுகளை உட்கொள்வது அவசியம். கருவளையப் பிரச்சினையிலிருந்து விடுபட கொள்ளுப் பயிரை பயன்படுத்தலாம். மேலும் சுருக்கங்கள், உடலை டோனிங் போன்ற பிரச்சனைக்கு உதவுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]