குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளரும் விதவிதமாக சமைத்து அசத்துகின்றனர். இந்த வாரம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ள எபிசோடில் விவசாயி நந்தகுமார் இலுப்பை பூ சம்பா அரிசியை வைத்து கூட்டாஞ்சோறு சமைத்து நடுவர்களுக்கு பரிமாறி பாராட்டுகளை பெற்றார். இந்த மாதிரியான பாரம்பரியான அரிசி வகைகளின் நன்மைகளை அறியாத காரணத்தால் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுகிறோம். இலுப்பை பூ சம்பா அரிசியை வடித்து சாப்பிட்டால் மட்டுமே முழு நன்மைகளை பெற முடியும். இதை அன்றாட உணவுமுறையில் வடித்து சாப்பிடும் போது நோய் பாதிப்புகளை தடுக்க முடியும். இலுப்பை பூ சம்பா அரிசி வடிப்பது எப்படி ? அதன் ஊட்டச்சத்துகள், நன்மைகளை பார்ப்போம். இது மருத்துவரின் தகவல் பெறப்பட்டு எழுதப்பட்டுள்ளது.
இலுப்பை பூ சம்பா அரிசி வடித்தல்
இலுப்பை பூ சம்பா அரிசியை இரண்டு முறை தண்ணீரில் கழுவவும். முதல் முறை கழுவும் போது உமி மேலே வந்துவிடும். ஒரு கப் அரிசிக்கு ஐந்து கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்து ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். ஊறவைத்த தண்ணீரை சமையலுக்கும் பயன்படுத்தலாம். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அரிசியை போடுங்கள். 15 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும். அதன் பிறகு அடுப்பை ஆஃப் செய்துவிட்டு 15 நிமிடங்களுக்கு அப்படியே விடுங்கள். அடுத்ததாக தண்ணீரை வடித்து சாப்பிடலாம்.
இலுப்பை பூ சம்பா அரிசி நன்மைகள்
- இலுப்பை பூ சம்பா அரிசியை தொடர்ந்து சாப்பிடும் நபர்களின் எலும்புகள் வலுப்பெறும். எலும்புப்புரை போன்ற எலும்பு நோய்கள் பிற்காலத்தில் ஏற்படாமல் தடுத்திட முடியும். எலும்பின் அடர்த்தி சீராக பராமரிக்கப்படுவதால் எலும்பு முறிவு வாய்ப்பும் குறைவே. எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அரிசி வகைகளில் இலுப்பை பூ சம்பா அரிசியும் ஒன்று.
- இலுப்பை பூ சம்பா அரிசி பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை குறைத்திடும். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் தொற்று பிரச்னை அல்லது நுரையீரலில் இருந்து கழிவு இருந்தால் அதை வெளியேற்றி சுத்தப்படுத்திட இலுப்பை பூ சம்பா அரிசியை அன்றாட உணவில் சேர்க்கவும்.
- இலுப்பை பூ சம்பா அரிசியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். இதில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் குடல் இயக்கத்தை சீராக வைக்கும். நார்ச்சத்து போதுமான அளவு உட்கொண்டால் மலச்சிக்கலை தவிர்க்க முடியும்.
- அதே போல சரியான அளவில் நார்ச்சத்து உட்கொள்வது உடல் எடையை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க உதவும். வளர்சிதை மாற்றம் ஊக்குவிக்கப்படுவதால் உடல் எடை அதிகம் ஆகாமல் தடுக்கப்படும்.
- இலுப்பை பூ சம்பா அரிசியின் கலோரியும் குறைவே. இது டைப் நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்க உதவும். இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்.
- இரும்புச்சத்தும் இந்த அரிசியில் இருப்பதால் இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை சீராக இருக்கும். இரத்த சோகை பாதிப்பு உள்ள நபர்கள் இலுப்பை பூ சம்பா அரிசி சாப்பிடலாம்.
- பெண்கள் இந்த அரிசியை சாப்பிடுவது முக்கியம். ஏனெனில் மார்பக் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்திடும்.
மேலும் படிங்கமாம்பழ கொட்டையை பவுடராக்கி உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும்; எல்லா பிரச்னைக்கும் ஓரே தீர்வு
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation