herzindagi
stay younger tips  for women

Tips to Stay Younger : என்றும் இளமையுடன் வாழ, இதை மட்டும் செய்தால் போதும்!

உங்கள் வயது 30-40 க்கு மேல் இருந்தால், நீங்கள் என்றும் இளமையாக இருக்க விரும்பினால், இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சில குறிப்புகளை தவறாமல் முயற்சிக்கவும். 
Editorial
Updated:- 2023-10-03, 15:44 IST

இளமையான சருமத்தை பெற வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் உடைய கனவு. கனவும், ஆசையும் இருந்தாலும் நம்மில் பலரும் நம் சருமத்தை கவனித்துக் கொள்ளத் தவறிவிடுகிறோம். இதனால் பல சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இளமையான சருமத்தைப் பெற விரும்பினால், முதலில் உங்கள் சருமத்தையும் அதன் தேவைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

வயது கூடும் பொழுது, சருமமும் வயதானவர் போல கட்சியளிக்க தொடங்குகிறது. இந்த வயதாகும் செயல்முறையை நம்மால் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். ஆனால் இதற்கு காரணமான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளை நிச்சயமாக கட்டுப்படுத்த முடியும். அதே சமயம், சருமத்தை அதிகமாக சுத்தம் செய்வதாலும் சருமம் எரிச்சலடையலாம். இது வயதான தோற்றத்திற்கு வழிவகுக்கிறது. சருமத்தில் படிந்துள்ள மாசு, மேக் அப் போன்ற பொருட்களை மென்மையாக அகற்ற வேண்டியது அவசியம். இளமை மற்றும் பளபளப்பான சருமத்தை பெற உதவும் சில எளிய பயனுள்ள குறிப்புகளை இன்றைய பதிவில் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

என்றுமே ஸ்வீட் 16 தான், இளமையாக இருக்க அருமையான டிப்ஸ்

stay young face tips

  • ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது முகத்தை கழுவ வேண்டும். குறிப்பாக அதிக அதிகமாக வியர்வை வந்தாலோ அல்லது தொப்பி ஹெல்மெட் போன்ற விஷயங்களை போடும்போது சருமத்தில் எரிச்சல் ஏற்படலாம். இது போன்ற நிலைகளில், அதிகமாக வியர்க்கும்பொழுது சருமத்தை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
  • சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும் அழகு சாதன பொருட்களை தவிர்த்திடுங்கள். ஏதேனும் தயாரிப்புகளை பயன்படுத்தும் பொழுது சருமத்தில் எரிச்சல் உணர்வு ஏற்படும். இது போன்று தயாரிப்புகளால் சருமம் முதிர்ச்சி அடையலாம்.
  • குறிப்பிட்ட ஒரு முக பாவனை செய்வதை தவிர்க்கவும். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட தசைகளை தொடர்ந்து பல வருடங்களுக்கு சுருக்கும் பொழுது, சுருக்கங்கள் நிரந்தரமாக மாறலாம்.
  • வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இது போன்ற காய்கறிகளை சாப்பிட்டு வர பல நோய்களை தடுக்கலாம் இதனுடன் சரும ஆரோக்கியமும் மேம்படும்.
  • கீரைகள் மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவும். இது போன்ற காய்கறிகளால் சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். இதன் மூலம் சுருக்கங்கள் மற்றும் வயது முதிர்வின் அறிகுறிகளை குறைக்கலாம்.

stay young tips

  • மோசமான தூக்க சுழற்சியால் சருமம் பாதிக்கப்படலாம். இதனால் இளம் வயதிலேயே முதுமையான தோற்றமும் உண்டாகிறது. சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்துக்கொள்ள தினமும் குறைந்தது 7-9 மணி நேரங்களாவது தூங்க வேண்டியது அவசியம்.
  • எலும்பு சூப் போன்ற உணவுகள் கொலாஜின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள இது போன்ற சூப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.
  • ஆலிவ் ஆயிலில் நிறைந்துள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் வளர்சிதை மாற்றம் சார்ந்த பிரச்சினைகளைத் தடுக்கின்றன இது உங்களை இளமையாக வைத்துக் கொள்ள உதவும்.
  • காலா, மத்தி, சூரை போன்ற மீன் வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும், UV கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும் இது போன்ற மீன் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • கொக்கோவில் உள்ள பிளேவனால்கள் சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இதனால் சருமத்திற்கு ஆக்சிஜன் விநியோகம் சிறப்பாக இருக்கும் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
  • மன அழுத்தம் வாழ்க்கையின் தரம் மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இது சருமத்திலும் பிரதிபலிக்கும். சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மனஅழுத்தத்தை விட்டு விலகி இருக்கவும்.
  • மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்யலாம். இதை தவிர உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடலாம், வெளியே செல்லலாம். திரைப்படங்களை பார்க்கலாம் அல்லது உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களில் ஈடுபடலாம்.
  • சைக்கிளிங், ஜாகிங், நடனம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடும்போது உடல் எடையை பராமரிக்கலாம். இதனுடன் சர்க்கரை நோய், உடல் பருமன், இருதய நோய் போன்று நோய்களின் அபாயத்தையும் குறைக்கலாம் இது சருமத்திற்கு இளமையான தோற்றத்தை கொடுக்கும்.
  • உடலில் நீர் சத்து குறையாமல் இருக்க  போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் உடலில் நீர் சேர்த்து சீராக இருந்தால் வளர்சிதை மாற்ற செயல்முறையும், சரும ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
  • வயது கூடுவது இயற்கையானது, இதை நம்மால் தடுக்க முடியாது. இருப்பினும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, சமச்சீரான உணவு, போதுமான தூக்கம் போன்ற பழக்கவழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் இளமையான சருமத்தை பெற முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: நாள்பட்ட மலச்சிக்கலை வேரோடு விரட்டும் மூலிகை டீ!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]