Herbal Tea for Constipation : நாள்பட்ட மலச்சிக்கலை வேரோடு விரட்டும் மூலிகை டீ!

நாள்பட்ட மலச்சிக்கலை போக்க நம் வீட்டில் உள்ள ஒரு சில மசாலா பொருட்களை போதும். இன்றைய பதிவில் மலச்சிக்கலுக்கு தீர்வு தரக்கூடிய அற்புதமான மூலிகை டீ பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்…

ajwain cumin fennel for constipation

பெரும்பாலும் மோசமான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர அதிகப்படியான மன அழுத்தமும் குடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது. வயிறை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால் அல்லது காலையில் எழுந்தவுடன் மலம் கழிக்காவிட்டால் இது பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மலச்சிக்கல் பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லது.

மலச்சிக்கல் பிரச்சனைக்கு இயற்கையான முறையில் தீர்வு காண விரும்பினால் இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள மூலிகை டீயை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த டீ குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான மன்ப்ரீத் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மலச்சிக்கல் குணமாக வீட்டு வைத்தியம்

ajwain cumin fennel tea

  • ஓமம் சீரகம் மற்றும் சோம்பை கொண்டு மூலிகை டீ தயாரித்து குடிக்கலாம். இந்த மூன்று பொருட்களும்
  • மலச்சிக்கலிலிருந்து விடுபட உதவும்.
  • ஓமத்தில் உள்ள தைமால் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
  • ஓமத்தில் உள்ள நார்ச்சத்து வாயு மற்றும் அஜீரணம் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளை நீக்குகிறது.
  • சீரகத்தில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள், செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் கொடுக்கின்றன.
  • ஓமத்தை போலவே சீரகத்திலும் தைமால் எனும் சேர்மம் உள்ளது. இது வாயு தொந்தரவை நீக்க உதவுகிறது.
  • சீரகம் செரிமான மண்டலத்தை வலுப்படுத்தும்.
  • சோம்பு வயிற்றுக்கு குளிர்ச்சி தரும். மேலும் இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மலச்சிக்கலிலிருந்து விடுபட உதவும்.
  • சோம்பு கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை அன்றாட உணவில் சேர்த்து வர அஜீரணம் மற்றும் வயிற்றுப் பொருமலை தடுக்கலாம்.

மலச்சிக்கலை போக்கும் மூலிகை டீ

constipation home remedies

  • ஓமம் - ¼ டீஸ்பூன்
  • சீரகம் - ¼ டீஸ்பூன்
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - 200மில்லி

மூலிகை டீ செய்முறை

  • முதலில் ஓமம் மற்றும் சீரகத்தை 7-9 மணி நேரத்திற்கு ஊறவைத்துக் கொள்ளவும்
  • பின்னர் இதனுடன் சோம்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் பாதியாக வற்றிய பின் வடிகட்டி வெதுவெதுப்பாக குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, இந்த ஒரு ஜூஸ் போதும்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP