herzindagi
weight loss healthy momos tips

Weight Loss Momos : மோமோஸ் சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம், எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!

மோமோஸ் சாப்பிட்டு எடையை குறைக்க ஆசையா? நிபுணரின் இந்த ஆலோசனைகளை தவறாமல் பின்பற்றுங்கள். இதனுடன் சமச்சீரான உணவு மற்றும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்துங்கள்…
Editorial
Updated:- 2023-09-30, 17:44 IST

மோமோஸ் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம் என்று சொன்னால், பெரும்பாலானவர்கள் இதை நிச்சயமாக நகைச்சுவையாக தான் எடுத்துக் கொள்வார்கள். வெயிட் லாஸ் செய்ய திட்டமிட்டால் பிடித்த உணவுகளை விட்டு விட வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. அதிலும் பலருக்கும் மிகவும் விருப்பமான மோமோஸ் ஆரோக்கியமற்றதாகவே பார்க்கப்படுகிறது. இதில் நிறைந்துள்ள அதிக கலோரிகளால் உடல் எடை அதிகரிக்கலாம். மோமோஸ் பற்றிய இந்த கட்டுக்கதைகளை எல்லாம் கேட்ட பிறகு, உடல் எடையை குறைப்பதற்காக நீங்களும் மோமோஸ் சாப்பிடுவதை நிறுத்தி விட்டீர்கள் என்றால், இன்றைய பதிவை முழுமையாக படியுங்கள். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மோமோஸை தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மோமோஸ் சாப்பிட்டாலும் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும். ஆனால் நிபுணரின் பரிந்துரைப்படி ஒரு சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான ராதிகா கோயல் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, இந்த ஒரு ஜூஸ் போதும்!

நிபுணர் பரிந்துரை செய்யும் வெயிட் லாஸ் மோமோஸ்

momos during weight loss

  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஆவியில் வேக வைத்த மோமோஸை தேர்வு செய்வது நல்லது. பொறிக்கப்பட்ட மோமோஸை தவிரத்திடுங்கள்.
  • மைதாவில் செய்த மோமோஸிற்கு பதிலாக கோதுமை மாவு அல்லது சிறுதானிய மாவை கொண்டு தயாரித்த மோமோஸை சாப்பிட முயற்சிக்கலாம்.
  • சராசரியாக ஒரு பிளேட் வெஜிடபிள் மோமோஸில் (5-6) 280 கலோரிகள் வரை இருக்கலாம். ஆவியில் வேகவைத்த வெஜிடபிள் மோமோஸ் எடை இழப்புக்கான சரியான தேர்வாக இருக்கும்.
  • அதேசமயம் பொறிக்கப்பட்ட ஃப்ரைட் மோமோஸில் ஆவியில் வேக வைத்த மோமோஸை விட மூன்று மடங்கு அதிக கலோரிகள் இருக்கலாம். எனவே உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் கட்டாயமாக ஃப்ரைட் மோமோஸை தவிர்க்க வேண்டும்.
  • மோமோஸை ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக் கொள்வதற்கு பதிலாக முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளலாம். இல்லையெனில் கலோரிகள் அளவுகள் அதிகரிக்கக்கூடும்.
  • மோமோஸ் செய்யும்பொழுது காய்கறிகளுடன் சீஸ், சிக்கன், முட்டைகோஸ் போன்றவற்றையும் ஸ்டஃப் செய்ய பயன்படுத்தலாம். இதன் மூலம் உடலுக்கு தேவையான புரதத்தையும் பெறமுடியும். அதேசமயம் காய்கறிகளில் நிறைந்துள்ள வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஊட்டச்சத்து தேவையையும் பூர்த்தி செய்கின்றன.
  • மோமோஸ் உடன் பரிமாறப்படும் சட்னியில் அதிக எண்ணெயும், சோடியமும் இருப்பதால் இதை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக வீட்டில் அரைத்த புதினா அல்லது கொத்தமல்லி சட்னியை எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் கவனித்து கொள்ளவும் 

weight loss momos tricks

உடல் எடையை குறைக்க சமச்சீரான உணவுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைப்பதே சிறந்தது. உடல் எடையை குறைப்பதில் அவசரம் வேண்டாம். நிபுணரின் வழிகாட்டுதலுடன் உங்களுக்கான பிரத்தியேக டயட் பிளானை பின்பற்றுங்கள். 

இந்த பதிவும் உதவலாம்: எடையை குறைத்து, மூட்டுகளுக்கு வலு சேர்க்கும் உருளைக்கிழங்கு சாறு!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]