உடல் எடை கூடி விட்டதா?
மூட்டு வலி உங்களை அதிகம் தொந்தரவு செய்கிறதா?
மலச்சிக்கல் பிரச்சனைக்கு இயற்கை தீர்வு வேண்டுமா?
இன்றைய பதிவில் உருளைக்கிழங்கு சாறின் நன்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறோம். பொதுவாக உருளைக்கிழங்கு ஒரு கொழுப்பு நிறைந்த காய்கறியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இதில் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் பல சத்துக்களும் நிறைந்துள்ளன.
உடல்நல பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வு காண விரும்புபவர்களுக்கு உருளைக்கிழங்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உருளைக்கிழங்கு சாறில் இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கால்சியம், புரதம், வைட்டமின் A, B மற்றும் C போன்ற சத்துக்கள் உள்ளன. கொலஸ்ட்ராலை குறைப்பதில் தொடங்கி மலச்சிக்கலை நீக்குவது வரை உருளைக்கிழங்கு சாறு குடிப்பதால் ஏராளமான நன்மைகளை பெறலாம். உருளைக்கிழங்கு சாறின் ஆரோக்கிய நன்மைகளை இயற்கை மருத்துவரான டாக்டர் பிரமோத் வாஜ்பாய் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: நம்ப முடியாத அதிசய நன்மைகளை அள்ளித் தரும் வெண்பூசணி ஜூஸ்!
உருளைக்கிழங்கு உடல் எடையை அதிகரிக்கும் என்பது மிகப்பெரிய கட்டுக்கதை. உருளைக்கிழங்கை சமைக்கும் முறையே அதன் பலன்களை தீர்மானிக்கிறது. ஆராய்ச்சியின் படி உருளைக்கிழங்கு சாறு உடல் பருமனை குறைக்க உதவுகிறது. உருளைக்கிழங்கில் நிறைந்துள்ள வைட்டமின் C வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது உணவுக்குப் பிறகு உருளைக்கிழங்கு சாறு குடிப்பது பசி ஹார்மோன்களின் உற்பத்தியை தடுக்கிறது. இது பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் எடையை குறைக்க உதவுகிறது.
உருளைக்கிழங்கில் நிறைந்துள்ள வைட்டமின் K இரத்தம் உறைவதையும் எலும்புகள் வலுவிழப்பதையும் தடுக்கிறது. இது முழு உடலுக்கும் கால்சியம் சத்துக்களை வழங்க உதவுகிறது. உருளைக்கிழங்கு சாறு குடிப்பது மூட்டுகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது மூட்டு வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை போக்க உதவும்.
உருளைக்கிழங்கில் நிறைந்துள்ள நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும். செரிமான மண்டலம் மற்றும் இரைப்பை குடலை சுத்தம் செய்ய உருளைக்கிழங்கு சாறை எடுத்து கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு சாறில் நிறைந்துள்ள நார்ச்சத்து வைட்டமின் A, B போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவுகின்றன. உருளைக்கிழங்கு சாறை குடித்து வர இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கலாம்.
உருளைக்கிழங்கு சாறில் நிறைந்துள்ள வைட்டமின் C காயங்களை குணப்படுத்தவும், தொற்று நோயை எதிர்த்து போராடவும் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இந்த ஜூஸ் குடிப்பது எரிச்சலை குறைக்கிறது மற்றும் கால்களின் இயக்கத்தையும் சீராக்குகிறது.
சிறுநீரக நோய்களை தடுக்க உருளைக்கிழங்கு சாறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது சிறுநீர்ப்பையில் கால்சியம் கற்கள் உருவாவதை தடுக்கிறது. இந்து சாறு கல்லீரல் மற்றும் பித்தப்பையில் உள்ள நச்சுக்களை அகற்றவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : 15 நாட்களில் 3 கிலோ எடையை குறைக்க, நிபுணரின் அட்டகாசமான குறிப்புகள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]