நம் இந்திய வீடுகளில் பரிமாறப்படும் ஆரோக்கியமான பானங்களில் பூசணி ஜூஸும் ஒன்று. இது தாகத்தை தணிப்பதோடு மட்டுமின்றி, உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. இந்த பானத்தில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் காணப்படுகின்றன.
வெண்பூசணியை வைத்து அல்வாவில் தொடங்கி ஜூஸ் வரை பல விதமான ரெசிபிகளை செய்யலாம். இருப்பினும் இதை ஆரோக்கியமான முறையில் எடுத்துக் கொள்ள விரும்பினால் ஜூஸாக எடுத்துக் கொள்வதே சிறந்தது. வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: உடலின் அனைத்து உறுப்புகளையும் பலப்படுத்தும் முந்திரி பழம் பற்றி தெரியுமா!
வெண்பூசணியில் 97% நீர் சத்துக்கள் உள்ளன. உடலின் நீர் சத்துக்களை இயற்கையான முறையில் தக்க வைத்துக்கொள்ள இது போன்ற பானங்களை எடுத்துக் கொள்ளலாம். கோடை காலம் அல்லது அதிகப்படியான உடல் செயல்படுகளால் நீர் இழப்பு ஏற்படும் பொழுது, உடலின் நீர் சத்துக்களை மீட்டெடுக்க வெண்பூசணி ஜூஸை எடுத்துக் கொள்ளலாம்.
வெண்பூசணியில் பொட்டாசியம் சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன இவை இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், இதயம் சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன. மேலும் இதில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலின் அளவுகளை கட்டுப்படுத்துகின்றன. வெண்பூசணி ஜூஸை தொடர்ந்து உணவில் சேர்த்து வர இதய ஆரோக்கியமும் மேம்படும்.
வெண்பூசணி ஜூஸில் குறைந்த அளவு கலோரிகள் மட்டுமே உள்ளன. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்களும் நீர் சத்தும் உடல் பருமனை குறைக்க ஏற்றவை. இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இதனால் அடிக்கடி ஏதாவது உணவு சாப்பிட வேண்டும் என்ற பசி உணர்வு கட்டுப்படுத்தப்படும். நீர் சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த இந்த கலவையானது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.
பொதுவாக நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் யாவும் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன. இதில் வெண்பூசணியும் அடங்கும். இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. அஜீரண கோளாறு, மலச்சிக்கல் மற்றும் மூலம் போன்ற பல பல குடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு வெண்பூசணி ஜூஸ் நன்மை தரும்.
நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உடைய வெண்பூசணி, உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. வெண்பூசணி ஜூஸ் தாகத்தை தணிக்கவும், அழற்சியை குறைக்கவும், சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் 2 வேப்பிலையை மென்று சாப்பிட்டால் போதும், வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமாக வாழலாம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]