முந்திரி பருப்பு மட்டுமல்ல, அதன் பழங்களும் சுவை நிறைந்தவை. முந்திரி பழம் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் தாமிரம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை புரதம் மற்றும் தாதுக்களின் மிகச்சிறந்த ஆதாரமாகும்.
முந்திரி பழம் நன்மைகள்: முந்திரி பழம் இரத்த உற்பத்திக்கும், இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் மற்றும் உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. பலரும் அறிந்திடாத இந்த அற்புத பழம் குறித்த தகவல்களை இன்றைய பதிவில் காணலாம். முந்திரி பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: இரத்தம் ஊற, மலச்சிக்கல் நீங்கி ஆரோக்கியம் பெற பீர்க்கங்காய் சாப்பிடுங்கள்!
முந்திரி பழங்களை சாப்பிடுவது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, திசுக்கள், தசைகள் மற்றும் உடலின் பிற உறுப்புகளுக்கும் அதிக நன்மைகளை தருகிறது.
முந்திரி பழங்களில் காணப்படும் ப்ரோ அந்தோசயனின் எனும் சேர்மம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. மேலும் முந்திரி பழத்தில் நிறைந்துள்ள தாமிரம் செல்களின் மாற்றத்தையும் கட்டுப்படுத்துகிறது. பெருங்குடல் புற்று நோயை தடுப்பதற்கு முந்திரி பழங்களை சாப்பிடலாம்.
முந்திரி பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதன் மூலம் பல நோய்த் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகின்றன. இதில் உள்ள துத்தநாகம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அடிக்கடி நோய்வாய்ப்படுவதை தடுக்கின்றன.
முந்திரி பழங்களில் கொழுப்புகள் அதிகமாக இருந்தாலும் அவை ஆரோக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. இதனை சரியான அளவுகளில் எடுத்துக் கொண்டால் எந்தவித ஆபத்துகளும் ஏற்படாது. இதில் நிறைந்துள்ள நல்ல கொழுப்புகள் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களின் உற்பத்திக்கு உதவுகின்றன. இவை மூளை வளர்ச்சிக்கு சிறந்தவை. மேலும் இவற்றை சரியான அளவுகளின் எடுத்துக் கொண்டால் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
முந்திரி பழத்தில் காணப்படும் லுடீன் கண்களின் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருகின்றன. சூரிய கதிர்களின் தாக்கத்திலிருந்து கண்களை பாதுகாக்கவும், கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், ஒரு சில கன் சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்கவும் முந்திரி பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
முந்திரி பழத்தில் நிறைந்துள்ள இரும்பு சத்து உடலுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முந்திரி பழம் சாப்பிடுவது இரும்புச்சத்து பற்றாக்குறையினால் ஏற்படும் இரத்த சோகை, தொற்றுகள், பலவீனம் மற்றும் அடிக்கடி நோய்வாய்ப்படும் அபாயத்தை குறைக்கின்றன. இவற்றை உணவில் சேர்த்து வர நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்கும் மற்றும் பல உடல்நல பிரச்சனைகளையும் தடுக்கலாம்.
முந்திரி பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் C கொலாஜன் உற்பத்திக்கு உதவுகின்றன. இதில் நிறைந்துள்ள தாமிரம் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை பராமரிக்க உதவுகின்றன. முந்திரி பழங்களை சாப்பிட்டு வர இளம் வயதிலேயே ஏற்படும் வயதான தோற்றத்தை தடுக்கலாம். இது உங்களை இளமையாக வைத்துக் கொள்ள உதவும்.
முந்திரி பழங்களை சரியான அளவுகளில் மிதமாக எடுத்துக் கொண்டால் கொலஸ்ட்ராலின் அளவுகளை கட்டுப்படுத்தலாம். இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உடல் எடையை பராமரிக்கவும் உதவுகின்றன. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் எடை இழப்புக்கு வழிவகுக்கின்றன. இருப்பினும் இதை சரியான அளவுகளில் எடுத்துக் கொண்டால் மட்டுமே நல்ல விளைவுகளை காண முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: சுவாச பிரச்சனைகளை நீக்கி ஆரோக்கியத்தை காக்கும் இஞ்சி பூண்டு டீ!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]